“ஜப்பானில் கப்பலில் நடக்கும் விவசாயம்?” – சிரிப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் படம்

சமூக ஊடகம் சர்வ தேசம்

ஜப்பானில் கப்பலில் விவசாயம் நடக்கிறது என்று கோல்ஃப் மைதானம் போல் காட்சி தரும் விமானந்தாங்கி கப்பல் படம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

AIRCRAFT CARRIER 2.png

Facebook Link I Archived Link

விமானந்தாங்கி கப்பல் ஒன்று, கோல்ஃப் மைதானம் போல் மாற்றப்பட்ட படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜப்பான்ல கப்பல்ல விவசாயம் பண்றாய்ங்க இங்க அத மண்ண அள்ளிபோட்டு மூடுறாய்ங்க!” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை Majeeth Aranthai என்பவர் ‎உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பலம் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தைப் பார்க்கும்போது விமானந்தாங்கி கப்பல் கோல்ஃப் விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்ட போட்டோ ஷாப் படம் போல இருந்தது. நிலைத் தகவலில், ஜப்பானில் கடலில் நடக்கும் விவசாயம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஜப்பானின் மொத்த நிலப்பரப்பில் மிகக் குறைந்த அளவிலேயே விவசாயம் செய்யப்படுகிறது. அதிலும் பெரும்பாலான இடத்தை நெல் விவசாயமே ஆக்கிரமித்துக்கொள்கிறது. மற்ற காய்கறிகளை வளர்க்க போதிய இடமில்லை. இதனால், கட்டிடங்களுக்குள் விவசாயம் செய்யும் முறைகளைப் பின்பற்றி வருகின்றனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த படத்தைப் பார்க்கும்போதே போட்டோஷாப் என்பது தெரிகிறது. மேலும், இந்த பதிவுக்கு கமெண்ட் செய்த பலரும் கோல்ஃப் மைதானத்தைக் காட்டி விவசாயம் நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளீர்களே என்று விமர்சனம் செய்திருந்தனர்.

AIRCRAFT CARRIER 3.png

இருப்பினும் படத்தின் பின்னணியை ஆய்வு செய்தோம். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. பிரபல கோல்ஃப் விளையாட்டு வீரர் டைகர் உட் என்பவரின் கப்பல் என்று கூறி சமூக ஊடகங்களில் பரவியது தெரிந்தது. 2006ம் ஆண்டு இந்த இந்த புகைப்படம் தொடர்பாக உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தியுள்ளனர். அதில், இந்த தகவல் பொய்யானது என்று குறிப்பிட்டிருந்தனர். 

அந்த செய்தியில், “பிரபல கோல்ஃப் வீரர் டைக்ஸ் உட்ஸ் மிகப்பெரிய சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் டைகர் உட்ஸ் வாங்கிய கப்பல் வெறும் 155 அடி நீளம் கொண்டது. ஆனால், படத்தில் இருப்பதோ மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல்… இதன் நீளம் மட்டும் 900 அடிக்கு மேல் இருக்கும்” என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதே போல் மற்றொரு இணையதளமும் நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட படம் என்று இந்த படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஜப்பானில் கடலில் விவசாயம் நடக்கிறது என்ற இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:“ஜப்பானில் கப்பலில் நடக்கும் விவசாயம்?” – சிரிப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் படம்

Fact Check By: Chendur Pandian 

Result: False