
‘’பெண் ஒருவருடன் ஜாலியாக நடனமாடும் சாட்டை துரைமுருகன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ டேய் @Saattaidurai
என்னடா நடக்குது அங்க? 🤣🤣🤣 கூட ஆடுறது யாருடா? உன்னை ஏன் எல்லாரும் மாமா பயன் சொல்றங்கனு இப்பதாண்டா புரியுது 🤣🤣🤣
#NtKfails,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவில் பெண் ஒருவருடன் நடனமாடும் நபர் சாட்டை துரைமுருகன் இல்லை, என்று தெரியவந்தது. இதுபற்றி நாம் சாட்டை துரைமுருகன் தரப்பில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
அடுத்தப்படியாக, குறிப்பிட்ட வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் கூகுள் உதவியுடன் தகவல் தேடினோம். அப்போது, praveenmp89 என்பவர் இன்ஸ்டாகிராமில், ‘90’s kid wth 20’s kid‘ என்ற தலைப்பில் வெளியிட்ட பதிவு ஒன்றின் லிங்க் கிடைத்தது. அதில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவும் ஒன்றாக இருந்ததைக் கண்டோம். இவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.
குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுபோன்று ஏராளமான ரீல்ஸ் பதிவுகள் பகிரப்பட்டுள்ளதையும் கண்டோம்.
இதே நபர், அவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் குறிப்பிட்ட வீடியோ தொடர்பான புகைப்படம் ஒன்றை எடுத்து, பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், குறிப்பிட்ட நடன வீடியோவிற்கு, அதிக பார்வைகள் கிடைத்துள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவரிடம் விளக்கம் கேட்டபோது, ‘’ரீல்ஸ் செய்வதற்காக, எனது உறவுக்கார பெண் ஒருவருடன் இணைந்து, இந்த நடனமாடும் வீடியோவை பதிவு செய்தேன். நான் அரசியல்வாதி கிடையாது,’’ என்று தெரிவித்தார். இதன்மூலம், இவர்தான் குறிப்பிட்ட வீடியோவில் உள்ள நபர் என்பது தெளிவாகிறது.
எனவே, தவறான வீடியோ ஒன்றை எடுத்து, சாட்டை துரைமுருகன் பற்றி அரசியல் உள்நோக்கத்துடன் வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:பெண் ஒருவருடன் ஜாலியாக நடனமாடும் சாட்டை துரைமுருகன் என்று பரவும் தகவல் உண்மையா?
Written By: Pankaj IyerResult: False
