
‘’ஆந்திராவில் வக்ஃப் வாரியம் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டுள்ளது; சந்திரபாபு நாயுடு அதிரடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ andhra govt abolished waqf board.. இந்தியாவிற்கே முன்னோடியாக ஆந்திர பிரதேசதில் வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டது🔥
பொது சொத்துக்களையும் மக்களின் சொத்துக்களையும் பாதுகாக்க சனாதனிகள் எடுத்த துணிச்சலான முடிவு🙏…’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, நீண்ட நாட்களாக செயல்பாடு இல்லாமல் இருந்த வக்ஃப் வாரியத்தைக் கலைத்துவிட்டு, புதிய வக்ஃப் வாரியம் ஏற்படுத்த, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, செய்திகள் கிடைத்தன.
The Hindu Link l NDTV l Business Standard
இந்த விவரம் தெரியாமல், ‘Times Now’ ஊடகம் வெளியிட்ட ஒரு செய்தியை எடுத்து, பாஜகவின் ஐடி பிரிவு பொறுப்பாளர் Amit Malviya, அவரது X வலைதள பக்கத்தில் பதிவு வெளியிட்டதே இந்த குழப்பத்திற்குக் காரணம்.
Times Now ஊடகம் தவறுதலாக வெளியிட்ட அந்த செய்தியையும் கீழே இணைத்துள்ளோம்.
ஆனால், இதற்கு ஆந்திர மாநில அரசின் அதிகாரப் பூர்வ உண்மை கண்டறியும் குழு FactCheck.AP.Gov.in உடனடியாக மறுப்பு வெளியிட்டுள்ளது.
இந்த உண்மை தெரியாமல், இன்றளவும் பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் மேற்கண்ட Times Now செய்தியை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.
இதுதவிர, நாம் இந்த ஃபேக்ட்செக் கட்டுரையை வெளியிடும் நேரத்தில், ஆந்திர மாநில அரசு புதிய வக்ஃப் வாரியம் ஏற்படுத்தியுள்ளதாக, செய்தி கிடைத்தது.
New Indian Express l Deccan Herald
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல், தவறானது என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:ஆந்திராவில் வக்ஃப் வாரியம் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டதா?
Written By: Pankaj IyerResult: Misleading
