‘மோடி உருவில் என் தந்தையை காண்கிறேன்’ என்று வீரப்பன் மகள் வித்யா ராணி கூறினாரா?   

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘‘மோடி உருவில் என் தந்தையை காண்கிறேன்’’ என்று வீரப்பன் மகள் வித்யா ராணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ Dacoit Veerappan’s daughter after joining BJP said: 

“In Modi, I see the image of my father”,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

இதனை பலரும் உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவலில் கூறப்பட்டுள்ளது போன்று, வித்யா ராணி எங்கேயும் பேசியுள்ளாரா என்று தகவல் தேடினோம். ஆனால், அவ்வாறு எந்த செய்தியும் காணக் கிடைக்கவில்லை. அதேசமயம், வித்யா ராணி சில ஆண்டுகளுக்கு முன்பாக, பாஜக., வில் இணைந்து செயல்பட்டது உண்மைதான். 

The Print Link l Times of India Link 

ஆனால், தற்போது வித்யா ராணி, பாஜக.,வில் இல்லை. அவர், நாம் தமிழர் கட்சியில் இணைந்து, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். 

இதுபற்றிய செய்தி ஆதாரங்கள் இதோ…

The Hindu Link

ஏற்கனவே, நமது மலையாளம் பிரிவினர் இதுகுறித்து விரிவான ஃபேக்ட்செக் வெளியிட்டுள்ளனர். அந்த லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Fact Crescendo Malayalam Link  

எனவே, வித்யா ராணியை கிண்டல் செய்யும் வகையில் சிலர் வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது. ஒருவேளை வித்யா ராணி கடந்த காலத்தில் மோடியை பாராட்டி பேசியிருந்தாலும்கூட தற்போதைய 2024 மக்களவைத் தேர்தல் நேரத்தில் (அவர் மாற்று கட்சியில் சேர்ந்துவிட்டதால்) இதனை பகிர்வது, குழப்பம் ஏற்படுத்துவதாகவே அமையும். 

இதன்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:‘மோடி உருவில் என் தந்தையை காண்கிறேன்’ என்று வீரப்பன் மகள் வித்யா ராணி கூறினாரா?   

Written By: Fact Crescendo Team 

Result: Misleading