
‘‘அதிமுக கூட்டணி 54%, திமுக 40%, தவெக மற்றும் நாதக தலா 3% வாக்குகள் பெறும்,’’ என்று சாணக்யா, தினமலர் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’அதிரடி சர்வே முடிவுகள். அதிமுக கூட்டணி 54%, திமுக 40%, தவெக மற்றும் நாதக தலா 3% வாக்குகள் பெறும்’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தவறான தகவல், என்று தெரியவந்தது.
ஆம், சாணக்யா – தினமலர் இணைந்து வெளியிட்ட சட்டமன்ற தேர்தல் 2026 தொடர்பான கருத்துக் கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ள உத்தேச வாக்குகள் விவரம் வேறொன்றாக உள்ளது.

இதன்படி, சாணக்யா – தினமலர் இணைந்து வெளியிட்ட சட்டமன்ற தேர்தல் 2026 கருத்துக் கணிப்பு முடிவில், அதிமுக+பாஜக 38%, திமுக 33%, தவெக 22%, நாம் தமிழர் 7% வாக்குகள் பெறும் என்றுதான் கூறப்பட்டுள்ளது.
இதனை வேண்டுமென்றே எடிட் செய்து, அதிமுக+பாஜக 54%, திமுக 40%, தவெக மற்றும் நாம் தமிழர் தலா 3% வாக்குகள் பெறும் என்று கூறி, வதந்தி பரப்புகிறார்கள்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் முன்னுக்குப்பின் முரணான ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:சாணக்யா, தினமலர் கருத்துக் கணிப்பு பற்றி பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…
Fact Check By: Pankaj IyerResult: Misleading


