பங்களாதேஷில் இந்து மக்களை நடுரோட்டில் அடித்து உதைத்து மதம் மாற்றும் கும்பல் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’பங்களாதேஷில் இந்து மக்களை சிறை பிடித்து ! அடித்து உதைத்து !! அவர்களை பொது வெளியில் அமர வைத்து மதவெறி கும்பல்கள், படுபாதக  இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வைக்கும் கொடூர காட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *🤠 பங்களாதேஷில் இந்து மக்களை சிறை பிடித்து ! அடித்து உதைத்து !! அவர்களை பொது வெளியில் அமர வைத்து மதவெறி கும்பல் கள் படுபாதக  இஸ்லாமை ஏற்றுக் கொள்ள வைக்கும் கொடூர காட்சி !!!*😭
😭  🤢 😰
*🙏 இந்திய திருநாட்டின்  இராணுவமே பங்களாதேஷை இந்திய திருநாட்டின் 23 வது மாநிலமாக்கு*🙏,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3

இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட தகவலுடன் வீடியோ ஒன்றும் சேர்த்து பகிரப்படுகிறது. அந்த வீடியோவில், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் பலரும் காணப்படுகின்றனர். அவர்களில் ஒரு சிலர் கையில் பதாகைகள், மரக்கட்டைகளுடன் உள்ளனர். அதேசமயம், மற்றொரு பிரிவு நடுரோட்டில் அமர்ந்து இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்துகின்றனர். 

பார்ப்பதற்கு, கட்டாயத்தின் பேரில் நடுரோட்டில் இந்து மக்கள் அமர வைக்கப்பட்டு, தொழுகை செய்தது போன்ற அர்த்தம் தோன்றுகிறது.

எனவே, உண்மை என்ன என்று கண்டறியும் நோக்கில் தகவல் தேடினோம். அப்போது, வங்கதேச தலைநகர் Dhaka-ல் உள்ள Bashundhara Gate என்ற இடத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள், தங்களது போராட்டத்தின் இடையே நடுரோட்டில் இஸ்லாமிய வழக்கப்படி தொழுகை (Zuhr Namaz) நடத்தினர் என்றும், அதுதொடர்பான புகைப்படம், வீடியோவை எடுத்தே, வீண் வதந்தி பரப்புகிறார்கள் என்றும் தெரியவந்தது. 

Dhaka Press l Somoy News l Bangladesh Moments

கூடுதல் வீடியோ ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Video Link 1 l Video Link 2  

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:பங்களாதேஷில் இந்து மக்களை நடுரோட்டில் அடித்து உதைத்து மதம் மாற்றும் கும்பல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Pankaj Iyer  

Result: Misleading