மன்மோகன் சிங்கை மதிக்காத சீன அதிபர் என்று பரவும் தகவல் உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu தவறாக வழிநடத்துபவை I Misleading

‘’மன்மோகன் சிங்கை மதிக்காத சீன அதிபர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ பழைய இந்தியா பிரதமரும் பழைய சீனா அதிபரும்…

பாவம் சிங் சார்..🤣🤣🤣
140 கோடி இந்திய மக்களின் பிரதமர்  ஒரு இத்தாலி(நடன)க்காரி  பின்னால் பம்மி சென்ற கொடுமையான காலம்*….,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3   

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது. 

உண்மை அறிவோம்:

சமீபத்தில் சீனா சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது என்றும், அதற்கு முன் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஒரு பொம்மை போல நடத்தப்பட்டார் என்றும் கூறி பாஜக ஆதரவாளர்கள் மேற்கண்ட வீடியோவை பரப்புகின்றனர். 

ஆனால், இவர்கள் கூறும் தகவல் உண்மையா என்று கேட்டால், இல்லை என்பதே பதில். நமது ஆய்வில், இந்த வீடியோ கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டது, என்று தெரியவந்தது. 

அந்த காலகட்டத்தில் மன்மோகன் சிங் இந்திய பிரதமர் பதவியில் கிடையாது. அதற்கு முன், 2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்று, பாஜக ஆட்சி அமைந்து, நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வந்துவிட்டார். எனவே, இது தவறான தகவல். 

அடுத்தப்படியாக, மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசும் நபர்களில் சீன அதிபர் என்று யாரும் இல்லை. அது சீன  நாடாளுமன்ற குழு மட்டுமே. அந்த குழுவின் தலைவர் பெயர் Zhang Dejiang (Chairman of the Standing Committee of the National People’s Congress of China). 

மேலும், Zhang Dejiang தலைமையிலான குழு 2015ம் ஆண்டு இந்தியா வந்தபோது, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோரை மட்டும் சந்திக்கவில்லை. பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

இதுதொடர்பாக, The Chinese Embassy in India வெளியிட்ட செய்திக்குறிப்பு இதோ

இறுதியாக, கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்த ஃபேக்ட்செக் கட்டுரை வெளியாகும் இன்றைய நாள் (03.09.2025) வரையிலும் சீன அதிபர் பதவியில் Xi Jinping மட்டுமே உள்ளார். வேறு யாரும் பதவிக்கு வரவில்லை.

எனவே, முன்னுக்குப் பின் முரணான தகவல்களுடன் பழைய வீடியோ ஒன்றையும் சேர்த்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:மன்மோகன் சிங்கை மதிக்காத சீன அதிபர் என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Pankaj Iyer  

Result: Missing Context