சீமான் வெளியிட்ட அறிக்கைகள் என்று சமூக ஊடகங்களில் சில விஷமத்தனமான அறிக்கைகள் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சீமான் கையெழுத்திட்ட நாம் தமிழர் கட்சியின் அறிக்கை ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "உத்தரவு. எனது அருமை தம்பி சந்தோஷ் நடராஜன் ஈபெல் கோபுரத்தின் முன் புகைப்படம் எடுக்க விரும்புகிறான். எனவே தம்பிக்கு பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை வழங்க உத்தரவிடுகிறேன். புரட்சி வாழ்த்துகளுடன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்" இருந்தது.

இந்த பதிவை Mohamed Faisal என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 அக்டோபர் 15ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சீமான் அறிக்கை என்று சில அறிக்கைகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு சாட்டை துரைமுருகனை கட்சியிலிருந்து நீக்கி சீமான் உத்தரவிட்டதாக அறிக்கை பகிரப்பட்டது. அது போலியானது என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

இந்த சூழலில், பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை வழங்க உத்தரவிட்டதாக அறிக்கை பகிரப்பட்டு வருகிறது. இதைப் பார்க்கும்போது கேலி கிண்டல் செய்யும் வகையில் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது. இதே போன்று சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட சோகத்தை மறக்க மது பாட்டில் வாங்க நிதி உதவி தாருங்கள் என்று சீமான் கேட்டதாகவும் சிலர் பதிவிட்டு வருவதைக் காண முடிகிறது.

அசல் பதிவைக் காண: Facebook I Archive

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் செயற்களம் அமைப்பின் தலைமைப் பொறுப்பாளரும், மாநில ஐ.டி விங் செயலாளருமான ஜெகன்னாதனைத் தொடர்புகொண்டு பேசினோம். அவரும் இது போலியானது என்பதை உறுதி செய்தார்.

சிலர் நகைச்சுவைக்காக இதைப் பகிர்ந்தாலும், நாம் தமிழர் கட்சியின் லெட்டர் பேட், பதிவு எண், சீமான் கையெழுத்துடன் இந்த அறிக்கைகள் இருப்பதால், இவை எடிட் செய்யப்பட்டது, போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தன்னுடைய தொண்டருக்கு பிரான்ஸ் குடியுரிமை வழங்க சீமான் உத்தரவிட்டதுபோன்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் அறிக்கை போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சீமான் அறிக்கைகள் என்று பரவும் விஷம போட்டோஷாப் படங்கள்!

Fact Check By: Chendur Pandian

Result: Altered