
‘’அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகிதா’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ நிகிதா பாஜக உடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்று ஆதாரங்களுடன் செய்திகள் வரத்தொடங்கிவிட்டன… இனி நடுநிலையாளர்கள் !! அஜீத்குமார் படுகொலை குறித்து பேசுவதை வேகமாக நிறுத்துவார்கள்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், நிகிதா மற்றும் அண்ணாமலையுடன் பெண் ஒருவர் நிற்பது போன்ற புகைப்படம் ஆகிய இரண்டு புகைப்படங்களையும் ஒன்று சேர்த்து பகிர்ந்துள்ளனர்.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த தகவலை முதலில் திமுக ஆதரவு பத்திரிகையாளர் செந்தில்வேல் சமூக வலைதளங்களில் பரப்பியதாக, தெரியவந்தது.
இவ்வாறு செந்தில்வேல் வதந்தி பரப்பியதற்கு கண்டனம் தெரிவித்து, பாஜக நிர்வாகிகள் பலரும் X வலைதளத்தில் பதிவு வெளியிட்டிருந்ததையும் கண்டோம்.
இதையடுத்து, செந்தில்வேல் குறிப்பிட்ட பதிவில் இருந்த புகைப்படத்தை, எடிட் செய்து, வேறொரு புகைப்படத்தை சேர்த்து, தனது பதிவை அப்டேட் செய்துகொண்டார்.
செந்தில்வேல் அப்டேட் செய்த பதிவின் ஸ்கிரின்ஷாட்டை மீண்டும் ஒருமுறை கீழே இணைத்துள்ளோம்.
இதற்கிடையே பாஜக ஐ.டி.பிரிவு நிர்வாகி SG Suryah தரப்பிலும் விளக்கம் தரப்பட்டிருந்தது.
அடுத்தப்படியாக, தனது புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி, திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவதாகக் குற்றம்சாட்டி, பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி என்பவர், போலீசில் புகார் செய்துள்ளார்.
உருவ ஒற்றுமையை அடிப்படையாக வைத்து, வித்தியாசம் தெரியாமல் இவ்வாறு திமுக ஆதரவு பத்திரிகையாளர் செந்தில்வேல் முதலில் வதந்தி பரப்பியுள்ளார். அவரை பின்பற்றி திமுக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இந்த வதந்தியை பரப்புகிறார்கள். கூடுதல் செய்தி ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுளளது.
Polimer News l Puthiyathalaimurai l Hindu Tamil
மேலும், ராஜினி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளார். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதுதவிர, அண்ணாமலையுடன் ராஜினி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, அவரது சமூக வலைதள பக்கத்தில் கடந்த ஜூன் 4, 2025 அன்று பகிர்ந்துள்ளார்.
இதன்மூலமாக, பாஜக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி ராஜினி என்பவரின் புகைப்படத்தை எடுத்து, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசார் விசாரணையில் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய நிகிதாவுடன் சேர்த்து வதந்தி பரப்புகிறார்கள் என்று தெளிவாகிறது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படம் பற்றிய தகவல் தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நிகிதா என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
