
‘‘2026 குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ தமிழ்நாடு ஊர்தி
தமிழ் இல்லாமல் இந்தி.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது தவறான தகவல், என்று தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ ஃபேக்ட்செக் குழு TN Factcheck மறுப்பு தெரிவித்துள்ளதைக் கண்டோம்.

இதன்படி, குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு மாநிலங்களுக்கான அலங்கார ஊர்திகளில் அந்தந்த மாநில மொழிகள் எங்கு இடம்பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வகுத்து, செயல்படுத்தி வருகிறது.
இந்த விதிமுறையின் படி, அலங்கார ஊர்தியின் முன்பக்கத்தில் இந்தியும், பின் பக்கத்தில் ஆங்கிலமும், ஊர்தியின் இருபுறங்களில் அந்தந்த மாநில மொழிகளும் இடம்பெறும்.
இதன் அடிப்படையில்தான், டெல்லியில் நடைபெற்ற 2026 குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியின் இருபுறங்களிலும் தமிழ் மொழியில் ‘தமிழ்நாடு’ என்று எழுதப்பட்டுள்ளது. முன்புறம் இந்தி மற்றும் பின்புறம் ஆங்கிலமும் உள்ளது.

ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை என்றும், இந்திக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, மக்களை ஏமாற்றுகிறது என்றும் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
2026 குடியரசு தின விழா அணிவகுப்பு தொடர்பான முழு வீடியோ இதோ…
எனவே, குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram
Title:2026 குடியரசு தின அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading


