
மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஜோசப்பின் தொடர்ந்து வீசிய ஆறு பந்தில் ஆறு விக்கெட் வீழ்த்தினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆஸ்திரேலியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் மே.இ தீவுகள் அணியின் ஷமர் ஜோசப் (Shamar Joseph) தொடர்ந்து ஆறு பந்துகள் வீசி ஆறு விக்கெட் வீழ்த்தியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆஸ்திரேலியாவின் ஆறு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் தூக்கி மேற்கிந்திய வீரர் ஜோசப்பின் சாதனை…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒரே ஓவரில் ஆறு விக்கெட்டையும் வீழ்த்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர் ஷமர் ஜோசப் சாதனை என்று குறிப்பிட்டு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை பார்க்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது போன்று இருந்தது. மேலும். 90 ஓவர் போட்டி என்று குறிப்பிடப்பட்டிருந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால், அந்த வீடியோக்கள் தெளிவாக இருந்தன. உண்மையான வீடியோ போல் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.
கூகுளில், ஷமர் ஜோசப், ஆஸ்திரேலியா – மே.இ.தீவுகள், 6 விக்கெட் என அடிப்படை வார்த்தைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏழு விக்கெட் வீழ்த்திய ஜோசப் என்று குறிப்பிட்டு இதே வீடியோ 2024ம் ஆண்டு தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதன் முழு வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் 2024 ஜனவரி 28ம் தேதி பதிவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம். அப்போது, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 25 முதல் 28ம் தேதி வரை டெஸ்ட் போட்டி நடந்தது. அதில் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஜோசப் ஏழு விக்கெட் வீழ்த்தினார். அதை தொடர்ந்து ஆறு பந்துகளில் இல்லாமல், பல ஓவர்களில் வீழ்த்தினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு விக்கெட்டை அவர் வீழ்த்தியதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியாகிறது.

உண்மைப் பதிவைக் காண: cricket.com.au I Archive
2024ம் ஆண்டில் ஷமர் ஜோசப் ஏழு விக்கெட்களை வீழ்த்திய வீடியோவை எடுத்து, ஒரே ஓவரில் ஆறு விக்கெட் வீழ்த்தியது போன்று தகவலை சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2024ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஜோசப், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏழு விக்கெட் வீழ்த்தியதை தவறாக, தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு விக்கெட் வீழ்த்திய மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ஷமர் ஜோசப் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:ஆறு பந்தில் 6 விக்கெட் வீழ்த்திய மேற்கிந்திய வீரர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


