
‘’ஆலப்புழாவில் தங்கையை பலாத்காரம் செய்த நபரை கத்தியால் குத்திய அண்ணன்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ சம்பவம் 💥💥💥
ஆலப்புழாவில் 12 வயது தங்கையை பலாத்காரம் செய்த வாலிபரை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திய அண்ணன்..,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் இளைஞர் ஒருவர் மற்றொரு நபரை கத்தியால் குத்தி, தாக்குவது போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், நாம் இதுபற்றி Alappuzha Police Chief (DPC) அலுவலகத்தை தொடர்கொண்டு விளக்கம் கேட்டோம். நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், ‘’இது பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் நடந்த சம்பவம்தான். ஆனால், சமூக வலைதளங்களில் பகிரப்படுவது போன்று, தங்கைக்காக அண்ணன் செய்த சம்பவம் அல்ல. ஆலப்புழா KSRTC பேருந்து நிலையம் அருகே கடந்த ஜூலை 31 அன்று நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோதான் இது. Kannur பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவர் ஊட்டி சென்றபோது, அங்கு படிக்கும் கேரளாவைச் சேர்ந்த 19வயது இளம்பெண்ணை சந்தித்துள்ளார். அந்த பெண்ணை, மயக்க மருந்து கொடுத்து, ரியாஸ் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், குறிப்பிட்ட பெண்ணின் ஆண் நண்பர்கள், ஃபேஸ்புக் மூலமாக சாட் செய்து, ரியாஸை பழிவாங்கும் நோக்கில், ஆலப்புழாவுக்கு வரவழைத்துள்ளனர். அங்கு வைத்து, ரியாஸை கத்தியால் குத்தியுள்ளனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து, விசாரித்து வருகிறோம்,’’ என்று தெரிவித்தார்.
இதுபற்றி ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது.
Manorama Online l Mathrubhumi l News18 Kerala
ஆனால், இந்த விவகாரம் தொடர்பான வீடியோவை எடுத்து, 12 வயது தங்கையை பலாத்காரம் செய்த நபரை பழிவாங்கும் நோக்கில் அண்ணன் இவ்வாறு கத்தியால் குத்தியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பரப்புகிறார்கள். எனவே, இதுபற்றி Kerala State Police Media Centre சார்பாக, ஃபேஸ்புக்கில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பற்றி பகிரப்படும் தகவலில் முழு உண்மையில்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:தங்கையை பலாத்காரம் செய்த நபரை கத்தியால் குத்திய அண்ணன் என்ற தகவல் உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
