நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்: ஃபேஸ்புக் வதந்தியால் திடீர் பரபரப்பு

அரசியல் தமிழகம்

‘’நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்,’’ என்ற பெயரில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link 

அன்புசெல்வன் அன்பு

எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலர் உண்மை என நம்பி வைரலாக பகிர அதேசமயம், சிலர் இது தவறான செயல் என்று கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக, அறிவித்த நாள் முதலாக, அவரை மையமாக வைத்து பரபரப்பான செய்திகள் பகிரப்படுவது வழக்கமாக உள்ளது. இதன்படி, சமீபத்தில் துக்ளக் பத்திரிகை விழாவில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் பற்றி விமர்சித்து பேசினார்.

அவரது பேச்சு பெரியாரிய ஆதரவாளர்களிடம் எதிர்ப்பை கிளப்பியது. இதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது, எனக் குறிப்பிட்டார். 

அடுத்தடுத்து ரஜினிகாந்த் வெளியிட்ட கருத்துகளால் திராவிட அரசியல் கட்சியினர், ஆதரவாளர்கள் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இதையொட்டி, ரஜினியை விமர்சித்து பல விதமான தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அதில் ஒருவிதமான வதந்திதான் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ளது.

உண்மையில் ரஜினி இறக்கவில்லை, அவர் நலமுடன்தான் உள்ளார். இதுதொடர்பாக, அவருக்கு நெருங்கிய வட்டத்தில் விசாரித்தபோது, ‘ரஜினி மீதுள்ள அரசியல் அதிருப்தி காரணமாக, இவ்வாறான வதந்திகளை சிலர் திட்டமிட்டே பரப்புகிறார்கள்,’ எனக் குறிப்பிட்டனர்.

இது விளையாட்டான பதிவாக சம்பந்தப்பட்டவருக்கு தோன்றினாலும், சற்று விபரீதமான செயலாக உள்ளது. இதுபோன்ற வதந்திகள் சில சமயம், அப்பாவியான சமூக ஊடக பயனாளர்களை குழப்பிவிடும் என்பதை இப்படியான வதந்தி பகிர்வோர் புரிந்துகொள்வது நலம். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:நடிகர் ரஜினிகாந்த் அகால மரணம்: ஃபேஸ்புக் வதந்தியால் திடீர் பரபரப்பு

Fact Check By: Pankaj Iyer 

Result: False