
ஜம்மு காஷ்மீரில் திடீரென்று ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காட்டாற்று வெள்ளம் ஒன்று பாயும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காஷ்மீரில் திடீரென உருவான காட்டாற்று வெள்ளம் அனைத்தையும் சுருட்டி செல்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காஷ்மீர் மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம் என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவில் உள்ளவர்கள் கூக்குரல் எழுப்புவதை கேட்கும் போது காஷ்மீரி, இந்தி போல இல்லை. அரபி போன்ற மொழியில் கத்துவது போல உள்ளது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சமூக ஊடகங்களில் பலரும் இந்த வீடியோவை காஷ்மீர் என்றே குறிப்பிட்டு பதிவிட்டிருந்தனர். ஆனால், எந்த ஒரு ஊடகமும் இதை வெளியிடவில்லை. மேலும், காஷ்மீரில் எந்த இடத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்படவில்லை.
தொடர்ந்து தேடிய போது மொராக்கோ நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட கன மழை காரணமாக திடீர் காட்டாற்று வெள்ளம் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை மொராக்கோ நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அந்த செய்திகளில், Al Haouz என்ற பகுதியில் திடீர் மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு செய்தியில் Al Haouz பகுதியில் உள்ள Oued Azaden, Ouirgane என்ற இடத்தில் இந்த காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
மொராக்கோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள இடம் உள்ளதா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். கூகுள் ஸ்ட்ரீட் மேப்-ல் அந்த இடம் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அந்த பகுதியில் கூகுள் ஸ்ட்ரீட் மேப் இல்லை. ஆனால், கூகுள் மேப்-ல் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்றது போன்ற பாலம் மற்றும் சாலை இருப்பதைக் கண்டறிந்தோம். எனவே, இந்த வீடியோ மொராக்கோ நாட்டைச் சார்ந்ததுதான் என்பது உறுதியானது.

முடிவு:
காஷ்மீரில் ஏற்பட்ட திடீர் காட்டாறு வெள்ளம் என்று பரவும் வீடியோ மொராக்கோ நாட்டை சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:ஜம்மு காஷ்மீர் காட்டாற்று வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


