முஸ்லீம் பெண்கள் என்ற பெயரில் இந்து பெண்களை பிரசாரத்திற்கு பயன்படுத்திய பாஜக: போலி புகைப்படத்தால் சர்ச்சை

அரசியல் சமூக வலைதளம்

நாடாளுமன்ற தேர்தல் 2019 பிரசாரத்திற்காக, பாஜக.,வினர், இஸ்லாம் பெண்கள் என்ற பெயரில், இந்து பெண்களை ஈடுபடுத்தியதாகவும், இது பெரிய மோசடி எனவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வைரலாகி வருவதை காண நேரிட்டது. இது, உண்மையா, பொய்யா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், விரிவான ஆய்வு செய்ய தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

வதந்தியின் விவரம்:

வீதி வீதியாக பிஜேபி’க்கு பிரச்சாரம் செய்யும் இசலாம் பெண்கள்
NOTE:

பொட்டு நல்லா இருக்கு
இந்த கருப்பு ட்ரெஸ் வாடகை மொத்தமா எடுத்தா எவளோ?

Archive Link

இந்த புகைப்படத்தில் இருக்கும் அனைவருமே பார்ப்பதற்கு, இஸ்லாம் பெண்களைப் போல பர்தா அணிந்து, மேலே பாஜக துண்டை போர்த்தியுள்ளனர். அதில், ஒரு பெண் மட்டும் நெற்றியில் பொட்டு வைத்திருப்பதுபோல தெரிவது, முரண்பாடாக உள்ளது. இதனை உண்மை என நம்பி, 2800க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை:

சமீப காலமாக, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை ஒவ்வொருவரும் தங்களது அரசியல் பிரசாரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் பயன்படுத்துவது அதிகமாக உள்ளது. இதனால், செய்தியின் உண்மைத்தன்மையை பற்றி யாரும் கவலைப்படாமல், தங்களுக்குப் பிடித்தவர், பிடிக்காதவர் என்ற அடிப்படையில் அதிகளவில் வதந்திகளையே பரப்பி வருகிறார்கள். இதன்படிதான் மேற்கண்ட புகைப்படமும் பதிவிடப்பட்டுள்ளது.

முதலில், இந்த புகைப்படம் உண்மையானதுதானா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், #InVid உதவியுடன், குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மை பற்றியும், அதில் எதுவும் போட்டோஷாப் செய்துள்ளார்களா என மெட்டாஅனலிசிஸ் மற்றும் புலனாய்வு செய்து பார்த்தோம். இதில், குறிப்பிட்ட புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்ட ஒன்றுதான் என்று தெரியவந்தது. ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இதன்படி, உண்மையான பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி, அதில் பொட்டு இருப்பது போல சித்தரித்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது உறுதியாகிறது.  

இதுதவிர, பாஜக சார்பாக, தேர்தல் பிரசாரத்தில் முஸ்லீம் பெண்கள் பயன்படுத்தப்பட்டார்களா என கூகுளில் சென்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அதில், பல்வேறு இணைப்புகள் கிடைத்தன என்றாலும், முதலிலேயே ஒரு யூடியூப் வீடியோ இணைப்பு இருந்தது. பார்க்கும்போதே, நாம் தேடும் வீடியோ அதுதான் என்பது சந்தேகமின்றி உறுதியானது. அதனை கிளிக் செய்தால், சம்பந்தப்பட்ட யூடியூப் பக்கம் திறந்தது. மேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும் பெண் உள்பட நிறைய முஸ்லீம் பெண்கள் அதில், இடம்பெற்றுள்ளனர். ஆனால், யாரும் நெற்றியில் பொட்டு வைத்திருக்கவில்லை. இதன்படி, மேற்கண்ட புகைப்படம் சித்தரிக்கப்பட்ட போலி புகைப்படம் என்பது முதல்பார்வையிலேயே உறுதி செய்யப்படுகிறது.

உண்மையான புகைப்பட ஆதாரம் மற்றும் வீடியோ இணைப்புகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Archive Link

இந்த வீடியோ ஆரம்பித்த சில நொடிகளிலேயே குறிப்பிட்ட பெண்  தோன்றுகிறார். இதில், அந்த பெண்ணின் நெற்றியில் பொட்டு எதுவும் இல்லை. ஆனால், பொட்டு இருப்பதுபோல, போட்டோஷாப் செய்துள்ளனர்.  

அந்த பெண்ணை ஜூம் செய்து பார்த்தால், அவரது நெற்றியில் பொட்டு எதுவும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஆதாரங்களின்படி, நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) முஸ்லீம் பெண்கள் பாஜக சார்பான பிரசாரத்தில் பங்கேற்றது உண்மைதான்.
2) இது கடந்த 2018, டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
3) வீடியோவில் உள்ள ஒரு பெண்ணின் புகைப்படத்தை தனியா எடுத்து, அதில் பொட்டு இருப்பதுபோல போட்டோஷாப் செய்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.
4) பொட்டு வைத்த இந்து பெண்கள் யாரும் பர்தா அணிந்து, முஸ்லீம் பெண்போல நடிக்கவில்லை.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் குறிப்பிடும் புகைப்படம் சித்தரிக்கப்பட்ட ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  

Avatar

Title:முஸ்லீம் பெண்கள் என்ற பெயரில் இந்து பெண்களை பிரசாரத்திற்கு பயன்படுத்திய பாஜக: போலி புகைப்படத்தால் சர்ச்சை

Fact Check By: Parthiban S 

Result: False