
‘’வெள்ளி பீரோ வாங்கிய துர்கா ஸ்டாலின்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா அம்மா, மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ராக்கெட் தேவையா என்று கேட்டீர்கள். இப்போ வெள்ளியில் பீரோ தேவையா. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட வெள்ளி பீரோ.’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன், ஆனந்த விகடன் லோகோவுடன் கூடிய வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், வெள்ளி பீரோ ஒன்றை துர்கா ஸ்டாலின் திறந்து பார்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். முதலில், இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள காட்சிகளை கவனமாக பார்வையிட்டோம். அப்போது, துர்கா ஸ்டாலின் பின்னணியில், Guinness World Records என்றும், Sukra Jewellery என்றும் எழுதப்பட்டுள்ளதைக் கண்டோம்.
அடுத்ததாக, துர்கா ஸ்டாலின் சான்றிதழ் போன்ற ஒன்றை ஒருவருக்கு வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதனை சற்று பெரிதுபடுத்தி பார்த்தபோது, அதில் ‘’GUINNESS WORLD RECORDS CERTIFICATE The largest silver wardrobe was made by Sukra Jewellery (india) at Chennai on 17 October 2024,’’ என்று எழுப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் நாம் கூடுதல் தகவல் தேடினோம். அப்போது நமக்கு Sukra Jewellery வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு (லிங்க்) கிடைத்தது.
கூடுதல் செய்தி ஆதாரங்கள் இதோ…
DTNext l Chanakyaa l Thanthi TV l Vikatan l Patrikai
எனவே, ‘வெள்ளி பீரோ வாங்கிய துர்கா ஸ்டாலின்’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல், ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:துர்கா ஸ்டாலின் வெள்ளி பீரோ வாங்கியதாகப் பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
