
காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை தேவையா என்று சிந்திக்க ஆரம்பித்த வட இந்தியர்கள் கோட்சேவின் சிலையை அகற்றியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சிலை ஒன்றை இளைஞர்கள் உடைத்து கீழே தள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், “காந்தியை சுட்டுக்கொன்ற இந்திய தேச துரோகி கோட்சேவுக்கு சிலை தேவையா சிந்திக்க ஆரம்பித்த வடக்கன்ஸ் 2 ரூபாய் சங்கி கதறல் ஆரம்பம்” என்று எழுதப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “இந்தியாவின் முதல் தீவிரவாதி பாப்பார பரதேசி நாயின் சிலை வட இந்திய மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது.🔥🔥🔥
இந்தியா முழுவதும் ஆர் எஸ் எஸ் இந்துத்துவா தீவிரவாத பாப்பார நாய்களை அடித்து ஓட விடும் நாள் வெகு தூரத்தில் இல்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை சில அமைப்பைச் சார்ந்தவர்கள் ஆதரித்து வருகின்றனர். இந்த நிலையில் கோட்சேவுக்கு வைக்கப்பட்டிருந்த சிலையை வட இந்தியர்கள் அடித்து நொறுக்கியதாகச் சிலர் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவில் உள்ள சிலையை பார்க்கும் போது கேட்சே சிலை போலத் தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நேபாளத்தில் நடந்த போராட்ட வீடியோ போலத் தெரிந்தது எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். தொடக்கத்தில் நமக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. வேறு வேறு காட்சிகளைப் பதிவேற்றித் தேடிய போது, நியூஸ் 18 இந்தியா 2025 செப்டம்பர் 9ம் தேதி பதிவேற்றம் செய்த வீடியோ ஒன்று கிடைத்தது. அதில், நேபாளத்தில் ஜென் ஸீ இளைஞர் போராட்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இது நேபாளத்தில் எங்கு நடந்தது என்று குறிப்பிடப்படவில்லை.
தொடர்ந்து தேடிய போது, ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவு நமக்கு கிடைத்தது. அதில், நேபாளத்தில் நேபாள்கன்ஞ் (Nepalgunj) என்ற இடத்தில் உள்ள பிபி கொய்ராலாவின் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம்.
கூகுள் மேப்-ல் நேபாள்கன்ஞ் என்ற ஊரைக் கண்டறிந்தோம். அந்த ஊரில் உள்ள சாலை சந்திப்புகளை எல்லாம் பார்வையிட்டோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளது போன்று சிலை மற்றும் அருகில் கடைகள் இருப்பதைக் கண்டறிந்தோம். இதன் மூலம் இந்த சம்பவம் நேபாளத்தில் நடந்த இளைஞர் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதியானது.

நேபாளத்தில் நடந்த ஜென் Z போராட்டத்தின் போது நேபாளத்தின் முன்னாள் பிரதமர் பிபி கொய்ராலாவின் சிலையை போராட்டக்காரர்கள் இடித்த வீடியோவை, வட இந்தியாவில் கோட்சேவின் சிலையை இடித்த மக்கள் என்று தவறாக பகிர்ந்திருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நேபாளத்தில் ஜென் z போராட்டத்தின் போது அந்நாட்டு முன்னாள் பிரதமர் பிபி கொய்ராலாவின் சிலை உடைக்கப்பட்ட வீடியோவை வட இந்தியாவில் கோட்சே சிலையை உடைத்த வட இந்தியர்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram
Title:கோட்சேவின் சிலையை உடைத்த வட இந்தியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False


