தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "தகைசால் தமிழர் விருது வேண்டாம்! தமிழர் என்ற சொல் எங்களுக்கு ஒவ்வாமையான சொல் எங்களுக்கு ஒவ்வாமையான சொல், திராவிடர் என்பதே எங்களின் ஒரே பெருமைமிகு அடையாளம். தகைசால் தமிழர் விருது எனக்கு வேண்டாம்; தகைசால் திராவிடர் விருது எனக்கு வழங்கப்பட வேண்டும் - கி.வீரமணி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Rajeev Velan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 3ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் தமிழ்நாடு அரசு கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கி.வீரமணி நன்றி கூறியிருந்தார். இந்த நிலையில் தனக்கு தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கி.வீரமணி கூறியதாக சிலர் நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Archive

முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு, விருது வேண்டாம் என்றோ, தமிழ் என்றால் ஒவ்வாமை என்றோ கி.வீரமணி கூற வாய்ப்பே இல்லை. எனவே, வீரமணி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இதை உருவாக்கியிருக்கலாம் என்று தெரிந்தது. மேலும், இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். ஆனால், அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு எதுவும் இல்லை. தகைசால் தமிழர் விருது அறிவிப்பு மற்றும் அதற்கு கி.வீரமணி நன்றி தெரிவித்தது தொடர்பான நியூஸ் கார்டுகள் நமக்குக் கிடைத்தன.

Archive

இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழுக்கு அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவர்களும் இது போலியானது என்று உறுதி செய்தனர். மேலும், இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று பதிவையும் வெளியிட்டனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கி.வீரமணி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கி.வீரமணி கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False