குடியரசு துணைத் தலைவரை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்து அவமரியாதை செய்தாரா அமித்ஷா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

தான் சொகுசு குஷன் சோஃபாவில் அமர்ந்துகொண்டு, குடியரசு துணைத் தலைவரை பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அமித்ஷா – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பின் போது, அமித்ஷா அருகில் ஓரமாக தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. 

உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive

நிலைத் தகவலில், “அமித் ஷா உட்கார்ந்து இருக்கும் நாற்காலியை பாருங்கள். நமது மேன்மை பொருந்திய துணை ஜனாதிபதி அமர்ந்து இருக்கும் நாற்காலியை மற்றும் அந்த பவ்யமான விதத்தை பாருங்கள். பிளாஸ்டிக் நாற்காலி, சோபா போன்ற அரசியல் ஆட்டம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பு அல்ல” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் இந்த சந்திப்பின் போது இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டார் என்பது போன்று புகைப்படம் ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Archive

ஆனால், அந்த புகைப்படத்தைப் பார்க்க சமீபத்தில் எடுக்கப்பட்டது போல இல்லை. முன்பு தமிழ்நாடு பாஜக பொறுப்பாளராக இருந்த சி.பி.ரவி, முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மூத்த நிர்வாகிகள் பலரும் அந்த புகைப்படத்தில் இருப்பதைக் காண முடிகிறது. எனவே, சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிந்தது. எனவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: thenewsminute.com I Archive I bjp.org I Archive

புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு செய்தி ஊடகங்களில் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது பாஜகவின் இணையதளத்திலும் கூட இந்த நிகழ்வின் புகைப்படம் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அதில், “அஇஅதிமுக மூத்த தலைவர் பாஜக-வின் தேசிய தலைவர் அமித் ஷாவை மதுரையில் 2019 பிப்ரவரி 22ம் தேதி சந்தித்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட போது அமித்ஷா இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் ஆகியிருக்கவில்லை, சி.பி.ராதாகிருஷ்ணன் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராகவும் ஆகியிருக்கவில்லை. அப்போது எம்.பி, ஆளுநராகக் கூட சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லை. 2025ம் ஆண்டு செப்டம்பரில் தான் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.

இதன் மூலம் 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை இப்போது சி.பி.ராதாகிருஷ்ணன் பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அவமரியாதை செய்த அமித்ஷா என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:குடியரசு துணைத் தலைவரை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்து அவமரியாதை செய்தாரா அமித்ஷா?

Fact Check By: Chendur Pandian 

Result: False