திமுக ஆட்சியில் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு தவறாக வழிநடத்துபவை I Misleading

‘’ திமுக ஆட்சியில் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்து,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Twitter Claim Link l Archived Link 

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட பஸ் புகைப்படத்தை நன்கு உற்று கவனித்தாலேயே ஒரு விசயம் எளிதாக விளங்கும். ஆம், அதன் முகப்புப் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறை, அதிமுக ஆட்சிக்காலத்தில்தான் பின்பற்றப்படும். தற்போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி கிடையாது, திமுக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வென்று, ஆட்சி அமைத்துள்ளது.  எனவே, இந்த படம் அதற்கு முன்பாக எடுக்கப்பட்டதாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. 

இதன் அடிப்படையில் தகவல் தேடியபோது, இதேபோன்று புகைப்பட ஒப்பீடு செய்து, கடந்த 2018ம் ஆண்டு ஃபேஸ்புக் பயனாளர்கள் ஏராளமானோர் விமர்சித்திருப்பதைக் கண்டோம். இந்த தகவலை எடுத்தே, புதியதுபோல வார்த்தை கூட மாற்றாமல், தற்போது பகிர்கின்றனர் என்று தெரியவருகிறது. 


மேலும் சில ஃபேஸ்புக் பதிவுகள் லிங்க் இதோ…

facebook post 1 l facebook post 2 l facebook post 3

மேலும், 2018ம் ஆண்டிலேயே மற்றொரு blogspot கூட இந்த படத்தை வெளியிட்டுள்ளது. அதனையும் கீழே இணைத்துள்ளோம். 

senkettru.wordpress link 

கூடுதல் ஆதாரத்திற்காக, நாம் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தரப்பில் விசாரித்தோம். ‘’இந்த படம், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்டதாகும். பல ஆண்டுகளாக, இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒன்று. இதனை புதியதுபோல தற்போது எடுத்து, சிலர் பரப்பி வருகின்றனர். இது தவறாகும், எங்களது ஆட்சியில் பழைய பேருந்துகளுக்கு மாற்றாக, புதிய பேருந்துகள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றனர்.  

TimesOfIndia link l dtnext link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ‘’இந்த பஸ் படம், கடந்த 2018ம் ஆண்டு முதலே பகிரப்பட்டு வரும் ஒன்றாகும். 2011 முதல் 2021 வரையிலும், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியே நடைபெற்றது. இதனை தற்போதைய திமுக ஆட்சியுடன் தொடர்புபடுத்துவது தவறு,’’ என்று உறுதி செய்யப்படுகிறது.  

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:திமுக ஆட்சியில் பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: MISLEADING