
‘’சேலத்தில் குழந்தை கடத்தல் கும்பல்- பொதுமக்கள் அடித்து உதைத்து பிடித்தனர்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோவுடன் கூடிய தகவலை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சிலரை தாக்கும் காட்சி அடங்கிய வீடியோவின் பின்னணியில், ஒருவர் சேலம் உள்பட அனைத்து மாவட்ட மக்களும் ஜாக்கிரதையாக இருக்கும்படி பேசுகிறார்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வாட்ஸ்ஆப் உள்ளிட்ட இதர சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
முதலில், இந்த வீடியோ உண்மையா என்று, சேலம் மாவட்ட போலீசாரிடம் விசாரித்தபோது, இது தவறான தகவல், என தெரிவித்தனர். மேலும், இதுபற்றி ஏற்கனவே, விளக்கம் அளித்து ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியறிக்கையையும் நமக்கு அளித்தனர்.

எனவே, பழைய வீடியோவை வைத்து, மீண்டும் மீண்டும் புதியதுபோல, கடந்த சில ஆண்டுகளாகவே, இந்த தகவலை பலரும் உண்மை என்று நம்பி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனை நம்பாதீர் என்று, சேலம் மாவட்ட போலீசாரும், பல முறை அறிவுறுத்தினாலும், மக்கள் சரிவர கண்டுகொள்ளவில்லை என்று சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சேலத்தில் குழந்தை கடத்தல் கும்பலா?- பழைய வீடியோ மீண்டும் பரவுவதால் பரபரப்பு!
Fact Check By: Pankaj IyerResult: False
