
‘’ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டிய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ ஜெர்மனியில் இன்பச்சுற்றுலா அங்கிளின் ஷூட்டிங் இனிதே ஆரம்பம் ! இடம்📍 பெர்லின், ஜெர்மனி. #DMKFailsTN #TVKForTN #TVKPARTY #Naveen #TVKForTN2026 #தமிழகவெற்றிக்கழகம்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோ கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றபோது எடுக்கப்பட்டது, என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக, ஊடகங்களில் அப்போதே செய்தி வெளியாகியுள்ளது.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Economic Times l HW News English
கூடுதல் ஆதாரத்திற்காக, திமுக ஐ.டி., பிரிவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும், மு.க.ஸ்டாலின் ஜெர்மனி சென்றுள்ளதற்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
