இந்தியாவில் இஸ்லாமியர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை எரித்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இஸ்லாமியர்கள் இந்தியாவின் தேசியக் கொடியை எரிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இந்த மண்ணில் பிறந்து, இந்நாட்டில் வாழ்ந்து, பாரதம் தந்த அத்தனை பயன்களையும் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டின் கொடியை ஒரு உண்மையான குடிமகனால் எரிக்க முடியாது... பெற்றதாயும் தாய்நாடும் ஒன்றுதான்..." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Arun Dev என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூலை 13ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த பதிவில் தேசியக் கொடியை எரித்தவர்கள் இந்திய இஸ்லாமியர்கள் என்று நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், "இந்தியா தந்த அத்தனை பயன்களையும் அனுபவித்துக்கொண்டு தேசியக் கொடியை எரிக்க முடிகிறது" என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் இவர்கள் இந்தியர்கள் என்று அர்த்தம் கொள்ளும் வகையில் பதிவிட்டிருப்பதை அறிய முடிகிறது. இவர்கள் இந்தியர்களா, இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று ஆய்வு செய்தோம்.

படத்தை முழுமையாக வெளியிடவில்லை. எதையே மறைக்கும் வகையில் வழக்கமான வடிவத்திற்கு மாறாக வெட்டி பகிர்ந்துள்ளதைப் பார்க்கும் போது சந்தேகம் எழுகிறது. படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. படத்தில் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பிடித்திருந்த பேனரில் "ulama e nizamia pak" என்று தெரிந்தது. செய்தியைப் பார்க்கும் போது Jamaat-e-Islami Pakistan என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் இந்தியத் தேசியக் கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் குறிப்பிட்டிருந்தனர். Pak என்றால் பாகிஸ்தான் என எளிதில் தெரிந்துவிடும் என்பதால் அதை மறைத்துப் பதிவிட்டிருக்கலாம் என்று தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: apnews.com I Archive 1 I independent.co.uk I Archive 2

மேலும் தொடர்ந்து தேடிய போது, இந்தியாவில் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது என்று ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தது. மேலும், இந்த புகைப்படத்தை தங்கள் புகைப்பட கலைஞர் எடுத்தார் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதன் அடிப்படையில் முன்னணி ஊடகங்கள் இந்த புகைப்படம் மற்றும் செய்தியை வெளியிட்டு இருந்தன.

பாகிஸ்தானில் இந்திய தேசியக் கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடந்ததின் புகைப்படத்தை எடுத்து, இந்திய இஸ்லாமியர்கள் இந்தியத் தேசியக் கொடியை எரித்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

இந்தியா மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மாட்டேன் என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கூறியதாக பரவும் ட்வீட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தேசியக் கொடியை எரித்தவர்கள் இந்திய முஸ்லீம்களா?

Fact Check By: Chendur Pandian

Result: Partly False