சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தாரா?
நடிகர் சிவ கார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஃபேஸ்புக், ட்விட்டரில் நக்கீரன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், "பிரின்ஸ் பட நடிகை புகார்! பிரின்ஸ் படபிடிப்பு நடக்கும்போது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என பிரின்ஸ் பட நடிகை மரியா ரியாபோஷாப்க்கா புகாரளித்துள்ளார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Udhaya Kumar Sridhar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 9ம் தேதி இந்த நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளார். இவரைப் போல பலரும் இதை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடிகர் சிவ கார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை மரியா புகார் அளித்தார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், நவம்பர் 9ம் தேதி அப்படி ஏதும் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் வந்ததாக செய்தி இல்லை. வேறு ஊரில் அவர் புகார் அளித்திருந்தாலும் அது பற்றி செய்தி வெளியாகி இருக்கும். எனவே, இந்த நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டு நக்கீரன் இதழ் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. அதன் தமிழ் ஃபாண்ட் வேறு மாதிரியாக இருக்கும். மேலும், பின்னணி டிசைன் இல்லாமல் இருந்தது. எனவே, இது போலியானதாக இருக்கலாம் என்று தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ள நக்கீரன் 2022 நவம்பர் 9ம் தேதி வெளியிட்டிருந்த நியூஸ் கார்டுகளை பார்வையிட அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. மேலும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று முத்திரை குத்தி ட்விட்டரில் நக்கீரன் பதிவிட்டிருப்பது தெரிந்தது.
நக்கீரன் வெளியிட்டிருந்த ட்வீட் பதிவில், "எச்சரிக்கை... நக்கீரன் பெயருடன் பரவும் இந்த செய்தி போலியானது. நக்கீரன் இதை வெளியிடவில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் சிவ கார்த்திகேயன் மீது நடிகை புகார் அளித்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியானது.
முடிவு:
சிவகார்த்திகேயன் தன்னிடம் தவறாக நடந்தார் என்று பிரின்ஸ் பட நடிகை போலீசில் புகார் அளித்தார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:சிவகார்த்திகேயன் மீது பிரின்ஸ் பட நடிகை புகார் அளித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False