FactCheck: நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை!
‘’நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது,’’ என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நக்கீரன் கோபால் பற்றி அவ்வப்போது, சமூக வலைதளங்களில் இதுபோன்ற வதந்திகள், பகிரப்படுவது வழக்கமாக உள்ளது. நாமும் ஏற்கனவே, இப்படி பரவிய ஒரு வதந்தி பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறோம்.
இதுபோலவே, மேற்கண்ட வதந்தியும், நக்கீரன் கோபால் மனைவியை குறிவைத்து, பகிரப்பட்டு வருவதால், இதனை உண்மையிலேயே தந்தி டிவி வெளியிட்டதா என்று, அவர்களின் ஆசிரியர் குழுவை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர்களும், இதனை ஆய்வு செய்துவிட்டு, ‘’எங்களது பெயரில் பரவும் போலியான செய்தி இது. இதனை நாங்கள் மறுத்து, ட்விட்டரில் கூட விளக்கம் அளித்துள்ளோம்,’’ என்றனர்.
தந்தி டிவி வெளியிட்ட ட்வீட் லிங்கை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, இது தந்தி டிவி பெயரில் பகிரப்படும் போலியான செய்தி என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel
Title:நக்கீரன் கோபால் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று தந்தி டிவி செய்தி வெளியிடவில்லை!
Fact Check By: Pankaj IyerResult: False