
‘’ஆமை புகுந்த வீடும், சீமான் புகுந்த வீடும் விளங்காது,’’ என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’தம்பி சீமான் என்னை வந்து சந்தித்தது உண்மை, ஆமை புகுந்த வீடும் சீமான் புகுந்த வீடும் விளங்காது என்பதால் இந்த உண்மையை ரசிகர்களாகிய உங்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
நான் இறந்த பிறகு ரஜினிதான் என்னைய கூப்ட்டு பேசுனாருனு சொன்னான்னா நம்பாதிங்க அவந்தான் ரெண்டு மூனு கால் பன்னி பாக்கனும்னு சொன்னான் காரணம் கேட்டதுக்கு விஜயால் தூக்கம் கெட்டு அலைவதாகவும் சொன்னான் அதனால்தான் இந்த சந்திப்புக்கு ஒத்துக்கொண்டேன்.
எங்கள் வீட்டில் அவன் குடிச்சது குளிர்பானம் மட்டும்தான் ஆமைக்கறியோ அவிச்ச முட்டையோ கறி இட்லியோ சாப்டவில்லை. சாப்டதாக பொய் சொல்லிடுவானோ என்ற பயத்தில் இதை சொல்கிறேன்.
நான் அதை சொன்னேன் இதை சொன்னேன்னு கதை விடுவான் அவன் செவுல்லேயே விடு ஏன்னா இங்க வந்து விஜயை எதிர்க்கனும் ஆதரவு கொடுங்கனுதான் கேட்க வந்தான்.
இதுதான் நடந்தது ரசிகர்களே ஏமாறாதிர்கள்.
வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு! – ரஜினிகாந்த்’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது ரஜினிகாந்த் பெயரில் பரவும் போலியான அறிக்கை என்று தெரியவந்தது. கூடுதல் ஆதாரத்திற்காக, ரஜினிகாந்த் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை தனது வீட்டிற்கு நேரில் அழைத்துப் பேசியதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.
Indian Express Tamil l Asianet News Tamil l Maalaimalar
இதன்பேரில் வேண்டுமென்றே சீமானை கிண்டல் செய்யும் நோக்கில், திமுக ஆதரவாளர்கள் இத்தகைய போலியான அறிக்கை தயாரித்து, வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:‘ஆமை புகுந்த வீடும், சீமான் புகுந்த வீடும் விளங்காது’என்று ரஜினிகாந்த் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
