‘’ இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

Claim Link l Archived Link

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கடந்த 2015 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரையான காலத்தில் நாசிக்கில் உள்ள Currency Note Press சார்பாக, 37.54 கோடி எண்ணிக்கையிலான புது ரூ.500 நோட்டுகளை அச்சிட்டதாகவும், இதில் வெறும் 34.50 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகள் மட்டுமே ரிசர்வ் வங்கி வசம் சென்றடைந்ததாகவும் Right to Information Act (RTI) ஆர்வலர் Manoranjan Roy எழுப்பிய கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது. இதன்படி, ₹88,032.50 கோடி மதிப்புடைய ரூ.500 நோட்டுகள் மாயமாகியுள்ளதாகவும், இது இந்திய பொருளாதாரத்தில் நிகழ்ந்துள்ள மோசடி எனவும் குறிப்பிட்டு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

freepressjournal link l livemint link

ஆனால், இதுபற்றி தற்போது ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. ‘’ஊடகங்கள் கூறுவதுபோல ரூபாய் நோட்டுகள் எதுவும் மாயமாகவில்லை. தவறான புரிதலின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இவ்வாறு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளதே, இந்த குழப்பத்திற்குக் காரணம். இது உண்மையல்ல,’’ என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதையடுத்து, ஊடகங்கள் பலவும் தங்களது செய்தியில் திருத்தம் செய்ய தொடங்கியுள்ளன.

Businesstoday link l Hindustantimes link

எனவே, இந்த விவகாரம் பற்றி ரிசர்வ் வங்கி மறுப்பு கூறிய நிலையில், அப்டேட் செய்யாமல், தமிழ் ஊடகங்கள் சில தொடர்ந்து தவறான செய்தியை வெளியிட்டு வருவதாகச் சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Avatar

Title:Explainer: இந்திய பொருளாதாரத்தில் இருந்து ₹88,032 கோடி மதிப்பிலான கரன்சி நோட்டுகள் மாயமா?

By: Fact Crescendo Team

Result: EXPLAINER