
‘’தொழிலாளர்களுடன் ஒன்றாக சாப்பிடுவது போல பிரதமர் மோடி நடித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link
காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை விரிவுபடுத்தும் பணிகளை செய்த தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து பிரதமர் மோடி உணவு அருந்தும் புகைப்படத்தை மேலே பகிர்ந்துள்ளனர். அதற்கு, ‘’ உடன் உட்கார வைக்கப்பட்ட எவரும் அவரோடு சரிநிகராக சாப்பிட்டுவிடக் கூடாது எல்லாமே ஒரு போட்டோ சூட்டுக்குத் தான் (மற்றவர்கள் தட்டு திருப்பி வைக்கப்பட்டுள்ளது),’’ என தலைப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை விரிவுபடுத்தும் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திய அவர், அவர்களுடன் சமமாக அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மோடி தொழிலாளர்களுடன் சமமாக பழகியதை பாராட்டியும், விமர்சித்தும் இதுபற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இதையொட்டி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தொழிலாளர்களுடன் சமமாக அமர்ந்து உண்பதுபோல நடித்தார் என்று கூறியுள்ளனர். ஆனால், இது தவறாகும். யாரும் இந்த நிகழ்வில் உணவு உண்ணாமல் தடுக்கப்படவில்லை. மோடியுடன் அவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தியது உண்மைதான். அதுபற்றி மோடியே அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஊடகங்களிலும் இதுபற்றி செய்தி வெளியாகியிருக்கிறது.
News18 Link I India Today Link
பிரதமர் மோடி மட்டுமல்ல, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் தொழிலாளர்களுடன் அப்போது ஒன்றாக சாப்பிட்டது உண்மைதான். ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியை கீழே இணைத்துள்ளோம்.
எதையுமே முழுதாக பார்க்காமல், படிக்காமல் விமர்சிக்கும் மனோபாவத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் தகவல் பகிர்ந்துள்ளனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:பிரதமர் மோடி தொழிலாளர்களுடன் ஒன்றாக சாப்பிடுவது போல நடித்தாரா?
Fact Check By: Pankaj IyerResult: False
