
பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி என சன்னியாசிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive
பிரதமர் மோடி இந்து மதத் துறவிகளுடன் அமர்ந்து பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி? மயில்களுக்கு அரிசி போடுவது எப்படி? – நிபுணர்களுடன் மூதி ஆலோசனை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “வாத்தை மேச்சிக்கிட்டு, மயில் கூட குடும்பம் நடத்துற சராசரி மூளை வளர்ச்சி கூட இல்லாத முட்டாபய கிட்ட நாட்ட குடுத்தா அவன் என்ன செய்வான்? இப்பிடித்தான் கூறுகெட்ட வெறும்பயலுவள வச்சி கூத்தடிப்பான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Rajiv Gandhi Sivankalai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி துறவிகளுடன் கலந்துரையாடிய படத்தை இந்திய பொருளாதாரத்தை சரி செய்வது எப்படி என்று ஆலோசனை நடத்தினார் என்று குறிப்பிட்டு பலரும் பகிர்ந்து வருகின்றனர். மேலும், சராசரி மூளை வளர்ச்சி இல்லாத நபரிடம் நாட்டைக் கொடுத்தால் இப்படித்தான் கூத்தடிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். பிரதமர் மோடியை நையாண்டி செய்யும் வகையில் இந்த பதிவை வெளியிட்டிருக்கலாம். இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2016ம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. பிஏபிஎஸ் என்ற அமைப்பின் மறைந்த தலைவர் பிரமுக் ஸ்வாமி மகாராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி குஜராத் மாநிலம் சரங்பூருக்கு பிரதமர் மோடி வந்தார் என்றும், புதிய தலைவர் மற்றும் மூத்த சாதுக்களை சந்தித்து அவர் உரையாடினார் என்றும் அந்த அமைப்பின் இணையதளத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: baps.org I Archive
இதன் மூலம் பிஏபிஎஸ் மத அமைப்பின் தலைவர் மரணத்துக்கு வந்த போது மற்ற மூத்த சாதுக்களுடன் பிரதமர் மோடி சந்தித்துப் பேசிய புகைப்படத்தை எடுத்து, தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்தியப் பொருளாதாரத்தை சரி செய்ய சாதுக்களுடன் மோடி ஆலோசனை செய்தார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
இந்திய பொருளாதாரத்தை சரி செய்து தொடர்பாக சாதுக்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார் என்று பரவும் படம் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:பிரதமர் மோடி சாதுக்களுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து பொருளாதாரத்தை சரி செய்ய ஆலோசனை என கிண்டல்!
Fact Check By: Chendur PandianResult: Satire
