பாஜக எம்.எல்.ஏ., வானதியின் கணவர் சீனிவாசனுக்கு எச்.ஐ.வி. தொற்று என தினமலர் செய்தி வெளியிட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’வானதியின் கணவர் சீனிவாசனுக்கு எச்.ஐ.வி., தொற்று,’’ என தினமலர் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதே செய்தி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இதர சமூக வலைதளங்களிலும் பகிரப்படுவதைக் கண்டோம். 

உண்மை அறிவோம்:

குறிப்பிட்ட ஸ்கிரின்ஷாட் செய்தியின் கேப்ஷனில் VishwaHinduParisad என்று எழுதப்பட்டுள்ளது. அதனுடன் HIV என கூடுதலாக ஒரு ஹேஷ்டேக் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளது. 

அடுத்தப்படியாக, இதுபற்றி தினமலர் தரப்பில் நாம் கேட்டபோது, ‘’சமீபத்தில் வானதியின் கணவர் விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.,) வழக்கறிஞர் பிரிவு, அகில இந்திய இணை அமைப்பாளராக, நியமக்கப்பட்டுள்ளார். அதுகுறித்து நாங்கள் வெளியிட்ட செய்தியை எடுத்து, கேப்ஷன் எடிட் செய்து, இவ்வாறு சிலர் வதந்தி பரப்பியுள்ளனர்,’’ என்றனர். 

தினமலர் வெளியிட்ட உண்மையான செய்தி கீழே தரப்பட்டுள்ளது. 

Dinamalar Link 

உண்மையான செய்தி மற்றும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி இரண்டையும் ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:பாஜக எம்.எல்.ஏ., வானதியின் கணவர் சீனிவாசனுக்கு எச்.ஐ.வி. தொற்று என தினமலர் செய்தி வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: False

Leave a Reply