லைக்ஸ் வாங்க இஸ்ரேல் புகைப்படத்தை எடுத்து இந்திய ராணுவ வீராங்கனை என பரப்பும் நெட்டிசன்கள்!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

இஸ்ரேல் பெண் ராணுவ வீரர் படத்தை லைக் வாங்குவதற்காக என்னையெல்லாம் உங்களுக்கு பிடிக்குமா என கேட்டு சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பெண் ராணுவ வீரர் ஒருவரின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மீது, “ஒரு நடிகைன்னா உங்களுக்கு புடிக்கும்… என்னையெல்லாம் உங்களுக்கு புடிக்குமா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Pavani என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 19ம் தேதி பதிவிட்டிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

Annadurai என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் இந்த படத்தை 2022 ஜூன் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். நிலைத் தகவலில், “இந்திய நாட்டுக்கு – உன் ராணுவ துப்பாக்கி பிடித்திருக்கு அந்த துப்பாக்கிக்கோ உன்னை பிடித்திருக்கு ஆகமொத்தம் உன்னை – இந்த இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் பிடித்திருக்கு. பெண் விழுந்தா – இந்த பூமியே தாங்காது என்ற காலம் போய் பூமியையே ராணுவபெண் தாங்கும் தமிழ் அன்னையாக மாறிவிட்டாய் . வீரவணக்கத்தோடு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook 

உண்மை அறிவோம்:

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் வீரர் என்று குறிப்பிட்டு சிலர் இந்த படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அப்படி எதுவும் இன்றி என்னை எல்லாம் உங்களுக்கு பிடிக்குமா என்று கேள்வி எழுப்பியபடி பகிர்ந்து வருகின்றனர். அதற்கும் பல ஆயிரம் லைக்ஸ், ஷேர், கமெண்ட் வந்துள்ளது. கமெண்ட் செய்த பலரும் இந்திய நாட்டை காக்கும் சகோதரிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருப்பதைக் காண முடிந்தது. 

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது இவர் இந்திய வீரர் போல இல்லை. அந்த இடமும் இந்தியா போல இல்லை. மத்திய கிழக்கு நாடுகள் போல பின்னணி இருப்பதால் அந்த பெண் எந்த நாட்டைச் சார்ந்தவர் என்று ஆய்வு செய்தோம்.

படத்தைப் பெரிதுபடுத்தி, அந்த பெண்ணின் கையில் உள்ள லோகோவைப் பார்த்தோம். அவரது கையில் இஸ்ரேல் கொடி இருப்பதைக் காண முடிந்தது. எனவே, அவர் இஸ்ரேல் வீராங்கனையாக இருக்கலாம் என்று கருதி, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இஸ்ரேல் ராணுவம் என்று குறிப்பிட்டு இந்த பெண்ணின் படத்தை பல இணையதளங்கள் வெளியிட்டிருந்தன. ஆனால் நம்பகமான தளங்களாக அவை இல்லை.

எனவே, அந்த பெண்ணின் கையில் உள்ள லோகோவை அடிப்படையாக வைத்துத் தேடினோம். இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்கள் என்று கூகுள் இமேஜில் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பெண்ணின் கையில் உள்ள லோகோ போன்று உள்ள இஸ்ரேல் காவல் துறை வீரர்களின் புகைப்படங்கள் கிடைத்தன. இரண்டிலும் இஸ்ரேல் கொடி இருந்தன. இதன் மூலம் இந்த பெண் இஸ்ரேல் பாதுகாப்புப் படை அல்லது காவல் துறையைச் சார்ந்தவராக இருக்கலாம், நிச்சயம் இந்தியர் இல்லை என்பது உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: dreamstime.com

லைக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த பெண் யார் என்று குறிப்பிடாமல் என்னை எல்லாம் பிடிக்குமா என்று பதிவிட்டுள்ளனர். இவர் இந்திய ராணுவ வீரராக இருப்பார் என்று கருதி பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர். இவர் இந்தியர் இல்லை, இஸ்ரேலியர் என்று குறிப்பிடத் தவறியதன் மூலம் இந்த பதிவு தவறான புரிதலை ஏற்படுத்துகிறது.

முடிவு:

இந்திய பொருளாதாரத்தை சரி செய்து தொடர்பாக சாதுக்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார் என்று பரவும் படம் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:லைக்ஸ் வாங்க இஸ்ரேல் புகைப்படத்தை எடுத்து இந்திய ராணுவ வீராங்கனை என பரப்பும் நெட்டிசன்கள்!

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context