சனாதன ஆட்சியில் சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் | Social

‘’சனாதன ஆட்சியில் சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

இதில், ‘’ *_இதுதான் சனாதன ஆட்சி.* சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன், “வட இந்தியாவை பார்த்து நாடு பெருமை கொள்கிறது” – யாரோ சொன்னது’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன், வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில், இளம்பெண் ஒருவர் கழுத்தில் மாலையுடன் இளைஞருடன் நடந்து வருவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 

பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது பொழுதுபோக்கு நோக்கில் எடுக்கப்பட்ட ஸ்கிரிப்டட் வீடியோ என்று தெரியவந்தது. 

இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமில் DISCLAIMER என்று குறிப்பிடப்பட்டு, Kanhaiya Singh என்ற பெயரும் காட்டப்படுவதைக் கண்டோம். இதன் அடிப்படையில் தகவல் தேடியபோது, Kanhiyakashyap02 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் குறித்த வீடியோ பகிரப்பட்டுள்ளதாக, விவரம் கிடைத்தது. 

முழு வீடியோ லிங்க் இதோ…

இதுபோன்று பல வீடியோக்கள் குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ளன. இந்த நபர் ஏற்கனவே ‘’ஒரே பெண்ணை திருமணம் செய்த தந்தை, மகன்’’ என்று ஒரு வீடியோவை பரப்பி, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். நாமும் அப்போது ஃபேக்ட்செக் வெளியிட்டிருந்தோம். 

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்ட ஒன்று; உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram 

Avatar

Title:சனாதன ஆட்சியில் சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Pankaj Iyer  

Result: False