ரூ.5000 தரும் மத்திய அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் மத்திய அரசு ரூ.5000 வழங்குகிறது என்றும், வீடியோவில் தேசியக் கொடியை கிளிக் செய்தால் ரூ.5000 கிடைக்கும் என்றெல்லாம் ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 

பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் மத்திய அரசு வழங்கும் ரூ.5000 உங்கள் கணக்கில் இலவசத் திட்டம். இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் கணக்கில் பணத்தைப் பெறுங்கள்” என்று வீடியோ பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதே போன்று, கொடியை கிளிக் செய்யவும் ரூ.5000 நேரடியாக கணக்கில். இன்றே உங்கள் வாய்ப்பு” என்று குறிப்பிட்டு மற்றொரு பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 

உண்மை அறிவோம்:

இந்தியக் குடிமக்களுக்கு நேரடியாக ஒரு லிங்க்கை தொடுவதன் மூலம், இணையத்தில் பதிவு செய்வதன் மூலம் ரூ.5000 வழங்கப்படும் என்று மத்திய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அப்படி வௌியிட்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. ஆனால், மத்திய அரசு ரூ.5000 வழங்குகிறது என்று தொடர்ந்து வதந்திகள் மட்டும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

முன்பு பாஜக சார்பில் ரூ.5000 வழங்கப்படுவதாக இது போன்று வதந்தி பரவியது. அதில் நம்முடைய பேடிஎம், ரூபே போன்ற பணம் பெற, அனுப்ப உதவும் செயலிகளின் கணக்கு விவரங்களைக் கேட்டிருந்தனர். அந்த இணைப்பை கிளிக் செய்து, விவரத்தை அளித்தால் நம்முடைய பணம்தான் காணாமல் போகும் என்று கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அப்படி நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் எந்த ஒரு இணைப்பும் இல்லை. ஆனால், மத்திய அரசு ரூ.5000 தருகிறது, லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று வீடியோவை மட்டும் வெளியிட்டுள்ளனர். இந்த பக்கம் நம்பகமானது போலவும் இல்லை. எனவே, இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்தோம்.

மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் ரூ.5000 வழங்கப்படுகிறதா என்று தேடினோம். ஆனால், அந்த இணையதளத்தில் கூட அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த பதிவு மூலம் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றிருப்பது தெரிகிறது.

மத்திய அரசு மட்டுமல்ல, எந்த ஒரு அரசும், தனியார் நிறுவனமும் இப்படி இணைய இணைப்புகளை கிளிக் செய்தால் பணம் வழங்கும் என்றெல்லாம் அறிவிக்காது. இப்படி வரும் மெசேஜ்களை பிளாக் செய்துவிடுவது நல்லது. அதை கிளிக் செய்வதன் மூலம் நம்முடைய அக்கவுண்டில் இருக்கும் பணத்தை இழக்கும் வாய்ப்பு உள்ளது.

முடிவு:

இணைய இணைப்பை கிளிக் செய்தால் மத்திய அரசு ரூ.5000 தரும் என்று பரவும் தகவல் தவறானது. இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:ரூ.5000 தரும் மத்திய அரசு என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply