
‘‘‘எடப்பாடியாராக மாறிய கிங் கோலி’’, என்று சன் நியூஸ் வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் குழந்தைகள் விளையாடுவதைப் போல சில புகைப்படங்களை கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த பதிவு பற்றி சன் நியூஸ் ஒரு செய்தியை வெளியிட்டது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.

Sun News Tweet Link l FB post link
இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து, சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:‘எடப்பாடியாராக மாறிய கிங் கோலி’ என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதா?
Fact Check By: Fact Crescendo TeamResult: ALTERED
