
‘‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரிசெய்வோம்,’’ என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ சிலிண்டர் தட்டுப்பாடு தீர்வுக்கான ரகசியம் எங்ககிட்ட இருக்கு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தீர்வு கிடைக்கும்- உதயநிதி ஸ்டாலின்’’ என்று எழுதப்பட்டுள்ளது.

Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தி உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது Sun News பெயரில் பரவும் வதந்தி என்றும், உண்மையான நியூஸ் கார்டு வேறொன்று என்றும், தெரியவந்தது.

இதன்படி, உண்மையான நியூஸ் கார்டில் “ED, CBI, ECI உள்ளிட்ட தனது சார்பு அணிகளுடன் சேர்ந்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது பாஜக. இந்த அமைப்புகளை வைத்து மிரட்டி உருவாக்கப்பட்ட கட்டாய கூட்டணிதான் அதிமுக உள்ள கூட்டணி. வாரத்துக்கு ஒருமுறை இனி பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவார். ஆனால் எந்த புதிய திட்டமும் வராது- உதயநிதி, துணை முதலமைச்சர்,’’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது.
இதனை வேண்டுமென்றே எடிட் செய்து, திமுகவுக்கு எதிராக, வதந்தி பரப்புகிறார்கள், என்று தெளிவாகிறது.
கூடுதல் ஆதாரத்திற்காக, Sun News ஆசிரியர் குழுவிலும் பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ் கார்டு, எடிட் செய்யப்பட்ட ஒன்று, என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


