‘இஸ்ரேலின் இன்றைய நிலை’ என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் தாக்குதலில் கட்டிடங்கள் உடைந்து, மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் இருப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடங்கள் எல்லாம் இடிந்த நிலையில் ஒரு நகரமே சிதைந்து போய் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தன்னை அழிக்க யாருமில்லை என்று நினைத்த ஆணவக்காரனின் இன்றைய நிலை #இன்றைய_இஸ்ரேல்_நிலவரம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து […]

Continue Reading

கமேனி கொல்லப்பட்டதை கொண்டாடும் ஈரான் மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரானின் உயரிய தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை ஈரானில் உள்ளவர்களே கொண்டாடும் போது இங்குள்ளவர்கள் எதற்கு போராட வேண்டும் என்று கேட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive பலரும் சாலையில் நடனமாடிக் கொண்டாடுவது போன்று வீடியோ ஒன்று threads.com சமூக ஊடகத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், “இங்கு இருப்பவன் எதுக்குடா போராடுறீங்க அந்த மக்களை சந்தோஷமா […]

Continue Reading

ஈரானில் களமாட காத்திருக்கும் 80 ஆயிரம் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் களத்தில் 80 ஆயிரம் வீரர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரங்கம் ஒன்றில் ஆயிரக் கணக்கான வீரர்கள் அணிவகுத்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், ஈரானின் ராணுவ பலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ஈரானின் 80000 வீரர்கள் களத்தில் எச்சரிக்கையுடன் […]

Continue Reading

தப்பி ஓடும் இஸ்ரேலியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் நடத்தி வரும் ஏவுகணைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க இஸ்ரேலியர்கள் கூட்டம் கூட்டமாக வேறு இடங்களுக்கு தப்பிச் செல்கின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆயிரக் கணக்கான மக்கள் சாலையில் நடந்து செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Happy Trip” என்று இஸ்ரேல் கொடியுடன் எழுதப்பட்டுள்ளது. அதனுடன் அன்று நாமும் அழுதோமே வலிக்கிறது என்றும் […]

Continue Reading

ஈரான் தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனரா?

ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பயந்து இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அமைதியாக பாடல் பாடி வழிபாடு செய்வது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈரானிய ஏவுகணைகளுக்கு பயந்து இஸ்ரேலிய அதிகாரிகளும் வீரர்களும் பதுங்கு குழிகளில் தஞ்சம் […]

Continue Reading

இஸ்ரேல் ராணுவத்தை இஸ்ரேலியர்களே தாக்குவதாக பரவும் வீடியோ உண்மையா?

ஈரான் மீது தேவையில்லாமல் தாக்குதல் நடத்தி பிரச்னை ஏற்படுத்தியதாக இஸ்ரேல் ராணுவத்தை இஸ்ரேல் மக்கள் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் கூட்டமாக சிலர் மோதிக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேல் இராணுவதை துவைத்து எடுத்த இஸ்ரேலிய பொது மக்கள்.! மக்கள் கூறுகிறார்கள் நீங்கள் ஈரானை வம்பிழுத்தீர்கள், இப்போது எங்கள் வீடுகள் […]

Continue Reading

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் என்று பரவும் பழைய வீடியோ!

உக்ரைன் நாட்டுக்குள் பாராஷூட் மூலம் ஆயிரக் கணக்கான ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாராஷூட் மூலம் நூற்றுக்கணக்கானவர்கள் தரையிறங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உக்ரைனுக்குள் பாராசூட் மூலம் குதித்த ரஷ்ய வீரர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Qln News என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 பிப்ரவரி 24ம் […]

Continue Reading