
‘‘மெரினாவில் பேனா சிலை வைக்க முடியாமல் திண்டாடும் திமுக,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ மெரினாவில் வைக்க இருந்த பேனா சிலை
ஆட்சி மாற்றதால் இடம் தேடும் திமுக 🤣,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Archived Link
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது முந்தைய திமுக ஆட்சியில் 2023ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ, என்று தெரியவந்தது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி, கன்னியாகுமரி தொடங்கி, தமிழ்நாடு முழுக்க, பயணம் மேற்கொள்வதற்காக, முத்தமிழ் தேர் என்ற பெயரில் பேனாவடிவில் ஊர்தி ஒன்று வடிவமைக்கப்பட்டது. இந்த ஊர்தி 2023 நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, இறுதியாக டிசம்பர் 4ம் தேதி சென்னை சென்று சேர்ந்தது.

இந்த முத்தமிழ் தேர் ஊர்தியின் தொடக்க நாளன்று எடுக்கப்பட்ட வீடியோவையே தற்போது தவறான தகவல் சேர்த்து பரப்புகிறார்கள்.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவுக்கும், பேனா சிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram


