
‘’இது ராமாயணத்தில் வரும் ஜடாயு பறவை,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்பட பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
டிசம்பர் 29, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. ‘’ஆதிகாலத்தில் ஜடாயூ என்றழைக்கப்படும் பறவை இனம்,’’ என்று கூறி இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதையும் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ளது உண்மையில் என்னவென்று அறிய, ரிவர்ஸ் இமேஜ் முறையை பயன்படுத்தி, கூகுளில் தகவல் தேடினோம். அப்போது, இந்த புகைப்படங்கள் ஏற்கனவே வித விதமான வதந்திகளுடன் இணையதளத்தில் பகிரப்பட்டு வருபவை என தெரியவந்தது.
இதன்படி, ஃபானி புயல் தாக்குதலில் உயிரிழந்த கருடப் பறவை என்று கூறி வதந்தி பரவிய நிலையில், இது தவறான தகவல் என்று ஆய்வு செய்து, Hoax orfact இணையதளம் 2019ம் ஆண்டு செய்தி வெளியிட்டுள்ளது. அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதுபோன்ற பெரிய அளவிலான கழுகுகள் மலைப் பகுதிகளில் காணப்படுவது இயல்புதான். ஆனால், நகர்ப்புறங்களில் இருப்பவர்களுக்கு இது அரிய நிகழ்வுதான். அதன்பேரில்தான் இத்தகைய வதந்தி பரப்புகிறார்கள்.
நாம் ஆய்வு செய்யும் பதிவில் உள்ளது போலவே, ஒரு பெரிய கழுகு இறந்து கிடக்கும் புகைப்படம் ஒன்றை கீழே ஆதாரத்திற்கு இணைத்துள்ளோம். பார்த்தாலே, அது கழுகு என்று எளிதில் அடையாளம் புரியும்.
எனவே, கழுகுகள் பெரிய அளவில் வளர்வதும், அவை மலைப்பகுதிகளில் வசிப்பதும் இயல்புதான். அதற்காக, உண்மை தெரியாமல் அவற்றை ஜடாயு என்ற கற்பனை கதாபாத்திரத்துடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவது தவறாகும்.
ஏற்கனவே, இதுபோன்று பரவிய ஒரு வதந்தி பற்றி நாம் உண்மை கண்டறியும் ஆய்வு செய்து, முடிவை சமர்ப்பித்திருக்கிறோம். அதன் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
எனவே, கழுகின் புகைப்படத்தை எடுத்து, ராமாயண ஜடாயு என்று கூறி வதந்தி பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இது ராமாயணத்தில் வரும் ஜடாயு பறவை அல்ல; வதந்தியை நம்பாதீர்!
Fact Check By: Pankaj IyerResult: False
