
நேபாள விமான விபத்துக்கு முன் ஏர் ஹோஸ்டஸ் வெளியிட்ட ஜாலியான வீடியோ என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
News18 Tamil Nadu ஜனவரி 17, 2023 அன்று செய்தி ஒன்றின் லிங்க்கை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. அதில், “நேபாள விமான விபத்துக்கு முன் ஏர் ஹோஸ்டஸின் ஜாலியான டிக் டாக் வீடியோ – இணையத்தில் வைரல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் நேபாளத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் ஹேர்ஹோஸ்டஸ் ஆக பணியாற்றி வந்தவர் ஒஷின் அலே. இவர் டிக்டாக் பிரபலம் என்றும் கூறப்படுகிறது. இவர் விமான விபத்துக்கு முன்பு டிக் டாக்கில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போன்று வீடியோ வெளியிட்டார் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் விமானத்தில் யாரும் இல்லை. விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு பதிவிடப்பட்டது என்றால் பயணிகள் இல்லாமல் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த செய்தி உண்மைதானா என்று ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive
செய்தியைப் பார்த்தோம். அந்த செய்தியில் ட்வீட் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தனர். டிக்டாக் வீடியோ அதிலிருந்தது. மரணம் எப்போது நிகழும் என்று எதிர்பாராதது. இன்று விமான விபத்தில் உயிரிழந்த ஹேர்ஹோஸ்டஸின் வீடியோவை பகிர்ந்துள்ளேன் என்று யாரே ஒருவர் வெளியிட்டிருந்த ட்வீட் அது. தலைப்பு மற்றும் லீடில் கடைசி வீடியோ என்று குறிப்பிட்டுவிட்டு, செய்தியின் கடைசியில் “இது கடைசி பயணத்திற்கு முன்பு எடுத்த வீடியோவா அல்லது பழைய வீடியோவா என்பது உறுதி செய்யப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இலங்கைப் பிரிவு மூலம் டிக்டாக்கில் குறிப்பிட்ட அந்த வீடியோவை தேடி எடுத்தோம். அது கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் 11ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. பலரும் தற்போது அந்த வீடியோ பதிவுக்கு RIP என்று பதிவிட்டு வருவதைக் காண முடிந்தது.
தொடர்ந்து தேடிய போது சில ஊடகங்களிலும் கூட இது அந்த விமானப் பணிப் பெண்ணின் கடைசி வீடியோ இல்லை என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதன் மூலம் இந்த வீடியோ 2023ல் நிகழ்ந்த விமான விபத்துக்கு முன்பு பதிவிடப்பட்டது இல்லை என்பது உறுதியானது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தி பாதி தவறானது, தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நேபாள விமான விபத்துக்கு முன் ஹேர்ஹோஸ்டஸ் வெளியிட்ட வீடியோ என்று பரவும் செய்தி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:விமான விபத்துக்கு முன்பு ஏர் ஹோஸ்டஸ் வெளியிட்ட வீடியோ இதுவா?
Fact Check By: Chendur PandianResult: False
