விபத்துக்குள்ளான நேபாள விமானம் என்று பரவும் ஹாலிவுட் ஸ்டூடியோ காட்சி!

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடு என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

விமானம் கீழே விழுந்து சிதைந்து கிடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விமான விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது நேபாளத்தில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Saransaran Saransri என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜனவரி 16ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் நோபாள நாட்டில் Yeti விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் நேபாள விமான விபத்து என்று குறிப்பிட்டுப் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் அமெரிக்காவில் உள்ளது போன்று போலீஸ் வாகனம் எல்லாம் வருகிறது. எனவே, இந்த வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்படி தேடும் போதே யூனிவர்சல் ஸ்டூடியோஸ் ஹாலிவுட் என்று குறிப்பிட்டு நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற விமான காட்சிகள் நமக்குக் கிடைத்தன.

அதில் உள்ள யூடியூப் வீடியோக்களை பார்வையிட்டோம். “யூனிவர்சல் ஸ்டூடியோஸ் ஹாலிவுட் விமான விபத்து காட்சி – வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடிய போது யூனிவர்சல் ஸ்டியோவில் விமான விபத்து காட்சி உருவாக்கப்பட்டது தொடர்பான செய்திகள், பலரும் அந்த இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன.

இதன் மூலம் ஹாலிவுட் ஸ்டூடியாவில் உள்ள விமான விபத்து செட்டின் வீடியோவை நேபாள விமான விபத்து காட்சி என்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஹாலிவுட் விமான விபத்து செட் வீடியோவை நேபாள விமான விபத்து என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:விபத்துக்குள்ளான நேபாள விமானம் என்று பரவும் ஹாலிவுட் ஸ்டூடியோ காட்சி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply