FactCheck: ஜெயலலிதா தனது குழந்தையை தத்துக் கொடுத்த பத்திரம் என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘ஜெயலலிதா தனது குழந்தையை தத்துக் கொடுத்த பத்திரம்’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

Claim Tweet Link l Archived Link 

பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஜெயலலிதா – சோபன் பாபு ஒன்றாக லிவிங் டுகெதர் முறையில் கடந்த 1974-75 தொடங்கி, 1982 வரை வாழ்க்கை நடத்திய நிலையில், பிரிந்துவிட்டனர். அதன் பிறகே, ஜெயலலிதா அதிமுக.,வில் சேர்ந்து, பெரும் செல்வாக்கு பெற்ற நபராக வளர்ச்சியடைந்தார். இதெல்லாம் கடந்த கால வரலாறு. 

vikatan link l tamil factcrescendo link 1 l tamil factcrescendo link 2  

கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா இறந்த பிறகு, அவருக்கு நான்தான் வாரிசு என்று கூறி பலரும் அவ்வப்போது பேட்டி கொடுப்பது வழக்கமாக உள்ளது.  

இப்படிப்பட்ட சூழலில்தான், சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஈரோட்டை சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘’ஜெயலலிதா – சோபன்பாபுவின் மகன் நான்; என்னை அவர்கள் தத்துக் கொடுத்துவிட்டனர். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா, என்னையும், என் வளர்ப்பு பெற்றோரையும் கொடுமைப்படுத்துகிறார்,’’ என்றெல்லாம் கூறி, அவர் ஒரு பத்திரத்தையும் சமர்ப்பித்தார். அதில், ஜெயலலிதா, சோபன்பாபு மற்றும் வசந்தாமணி ஆகியோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, கையெழுத்தும் இடப்பட்டிருந்தது. ஆனால், பத்திர பதிவு நடந்த இடம் ஈரோடு என்றே கூறப்பட்டுள்ளது. 

இதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், ‘‘ஈரோட்டை சேர்ந்த வசந்தாமணியின் சொந்த மகன்தான் மனுதாரர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி. இவர் சுப்பிரமணி என்பவரிடம் முன்தேதியிட்ட பத்திரத்தை வாங்கி, ஜெயலலிதாவின் மகன் என்பதுபோல தத்து கொடுப்பு ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளார். இவருக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,’’ என்று உறுதி செய்திருந்தனர்.

இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்பட்டார். இதுபற்றி அப்போதே ஊடகங்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. 

Hindutamil link l tamil.samayam link 

எனவே, அடிப்படை வரலாறு எதுவும் தெரியாமல், இந்த போலியான பத்திர நகல்  புகைப்படத்தை (அதனை தயாரித்த நபரும் கைது செய்யப்பட்ட நிலையில்) சிலர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது மிகவும் தவறான செயலாகும். 

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

Avatar

Title:FactCheck: ஜெயலலிதா தனது குழந்தையை தத்துக் கொடுத்த பத்திரம் என்று பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

Fact Check By: Fact Crescendo Team 

Result: False