சென்னையில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு சிலை வைத்தாரா ஜெயலலிதா?
‘’தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு சென்னையில் சிலை வைத்த A1 குற்றவாளி ஒத்த ரோசா,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link l Archived Link
இதே செய்தியை பலரும் உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் பகிர்வதைக் காண முடிகிறது.
உண்மை அறிவோம்:
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சோபன் பாபு. இவருடன் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நெருங்கிய தொடர்பில் இருந்ததாக, அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். இதனை ஜெயலலிதாவே அந்த காலத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும், சில ஆண்டுகளில் இந்த உறவு முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு, ஜெயலலிதா முழு நேர அரசியலில் ஈடுபட தொடங்கினார். இதுபற்றிய சில செய்தி ஆதாரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
vikatan.com link l tamil.oneindia link l indiaherald.com link
இந்த சூழலில், கடந்த 2008ம் ஆண்டு சோபன் பாபு, சென்னையில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, சென்னை சூளைமேடு அடுத்த மேத்தா நகரில், நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் சோபன் பாபுவுக்கு அவரது குடும்பத்தினர் சிலை ஒன்றை நிறுவினர். இந்த இடம் அவர்களுக்குச் சொந்தமானதாகும். பிரதான சாலை சந்திப்பில் இருந்தாலும், அந்த சிலையை ஒட்டியே சோபன் பாபு வீடு உள்ளது. இதுபற்றி ஏற்கனவே ஊடகங்களில் தெளிவான செய்தி வெளியாகியுள்ளது.
சிலை வைத்த காலக்கட்டத்தில், அதன் பீடம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளதாகக் குறிப்பிட்டு, அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ‘’இந்த சிலை, சோபன் பாபு குடும்பத்தினருக்குச் சொந்தமான இடத்திலேயே உள்ளது, ஆக்கிரமிப்பு ஏதும் இல்லை,’’ என்று அப்போதே சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்ததையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அதன் பிறகு, 2015ம் ஆண்டு சில தமிழ் அமைப்புகள், சோபன் பாபு சிலையை முற்றிலும் அகற்றும்படி போராட்டம் நடத்தியபோது, ‘’இந்த சிலை எங்களது இடத்திலேயே உள்ளது. பொது இடத்தை ஆக்கிரமித்து நாங்கள் வைக்கவில்லை,’’ என்று சோபன் பாபு குடும்பத்தினர் விளக்கம் அளித்ததையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
Deccanchronicle link l telugu360 link
இதுபற்றிய வீடியோ செய்தி ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம்.
மேலும், சிலை நிறுவப்பட்ட 2008-09 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியே நடைபெற்றது. வேண்டுமானால், இந்த சிலை விவகாரத்தில் அப்போதைய திமுக ஆட்சியை விமர்சிக்கலாமே தவிர, அதிமுக.,விற்கும், ஜெயலலிதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சந்தேகமன்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram
Title:சென்னையில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு சிலை வைத்தாரா ஜெயலலிதா?
Fact Check By: Fact Crescendo TeamResult: False