மறைந்த நடிகர் ரகுவரன் பற்றி பகீர் தகவல் வெளியிட்ட 21 வயது மகன் அம்மா: பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

சமூக ஊடகம் | Social சினிமா | Cinema தமிழகம்

மறைந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ரகுவரன் பற்றி 21 வயது மகனின் தாய் ஒருவர் பகீர் தகவல் வெளியிட்டார் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Raghuvaran 2.png
Facebook LinkArchived Link 1Article LinkArchived Link 2

ரகுவரனும் நானும் ‘விரும்பித்தான் அதை செய்தோம்’…! ஆனால் பிரிஞ்சிட்டோம்’ 21 வயது மகனின் அம்மா வெளியிட்ட பகீர் தகவல்! என்று நடிகை ரோஹிணி படத்துடன் ஒரு லிங்க் பதிவிடப்பட்டுள்ளது. tamilanmedia.in என்ற இணையதளம் ஜனவரி 3, 2019 அன்று வெளியிட்ட இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். 

உண்மை அறிவோம்:

நடிகர் ரகுவரன் 2008ம் ஆண்டு காலமானார். அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில் அவரைப் பற்றி 21 வயது மகனின் தாய் பகீர் தகவல் வெளியிடுகிறார் என்ற தலைப்பு அதிர்ச்சியை அளித்தது. யார் அவர், அப்படி என்ன பகீர் தகவல் சொன்னார் என்று செய்திக்குள் பார்த்தோம். 

செய்தியினுள் வேறு எந்த பெண்ணும் ரகுவரன் பற்றிய பகீர் தகவலை வெளியிடவில்லை. ரகுவரனுடன் விவாகரத்து செய்துகொண்ட நடிகை ரோகிணியின் பேட்டி போன்ற செய்தியாக அது இருந்தது. ரோகிணி இதை எங்கே சொன்னா, எப்போது சொன்னார், அவராக இந்த கருத்தை வெளியிட்டாரா, அல்லது சமூக ஊடகத்தில் எழுதினாரா என்று எந்த தகவலும் இல்லை.

செய்தியின் உள்ளே, “1990களில் குறிப்பிட்ட படங்களில் நடித்தவர் ரோஹிணி. இவர் நடிகர் ரகுவரனைக் காதலித்து மணந்தார். பின்னர் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் ரகுவரனிடமிருந்து பிரிந்தார்” என்று குறிப்பிட்டிருந்தனர். பிரிந்தார் என்பதில் கூட எழுத்துப்பிழை, “ரகுவரனிடமிருந்து பிறந்தார்” என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த ஒரே ஒரு வரி மட்டும்தான் தலைப்பில் சொன்ன விஷயத்தோடு லேசாக ஒத்துப் போனது. மற்றபடி வேறு எந்த பெண்ணும் புகார் ரகுவரன் பற்றிய பகீர் தகவல் எதையும் வெளியிட்டதாக அதில் இல்லை.

Raghuvaran 3.png

பரபரப்புக்காக, அனைவரும் என்ன ஏது என்று பார்த்தவுடன் லிங்கை கிளிக் செய்து படிக்க வேண்டும் என்பதற்காக இப்படி பொய்யான தலைப்பை வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. காதலித்துத்தான் திருமணம் செய்துகொண்டோம்… ஆனாலும் பிரிந்துவிட்டோம் என்று ரகுவரனின் மனைவி ரோகிணி கூறியதை திரித்து விஷமத்தனமாக 21 வயது மகனின் அம்மா என்று தலைப்பில் கூறியுள்ளனர். இதன் மூலம் தலைப்பு தவறானது, மிஸ்லீடிங் செய்யக்கூடியது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட செய்தியின் தலைப்பு தவறானது என்பது உறுதியாகி உள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:மறைந்த நடிகர் ரகுவரன் பற்றி பகீர் தகவல் வெளியிட்ட 21 வயது மகன் அம்மா: பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False Headline