
‘’நெல் அறுவடை செய்யும் ரோபோ’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ நெல் அறுவடை செய்யும் ரோபோ… மோடியின் வளர்ச்சி…Vs நாட்டின் வளர்ச்சி.. மற்ற நாடுகளில் அறிவியல் கண்டுபிடிப்பு வளர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மாட்டு மூத்திரம் குடிக்கும் அளவுக்கு பார்ப்பனிய கண்டுபிடிப்பு வளர்ந்துள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது.
X Post l FB Claim l Youtube Claim
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இது AI எனப்படும் Artificial Intelligence தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்ட வீடியோ என்றும், உண்மையானதல்ல என்றும் தெரியவந்தது.
இதுபோன்று ரோபோ பயன்படுத்தி AI வீடியோக்கள் தயாரிப்பது பற்றி Wonder Studio என்ற யூடியுப் சேனல் விரிவான செய்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கி வருகிறது. மேலும், இந்த Wonder Studio ஆப் பயன்படுத்தி, நாம் எளிதாக ரோபோ தொடர்பான பல்வேறு வீடியோக்களை, வெவ்வேறு பின்னணி காட்சிகளுடன் தயாரிக்க முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக ஏற்கனவே நமது Fact Crescendo Srilanka குழு விரிவான ஃபேக்ட்செக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ உண்மையானதல்ல, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:நெல் அறுவடை செய்யும் ரோபோ என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
