FACT CHECK: அமித்ஷாவை சசிகலா திட்டியதாகக் கூறி பரவும் போலி ட்வீட்!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தொலைபேசியில் தன்னிடம் பேசிய அமித்ஷாவை திட்டினேன் என்று சசிகலா கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சசிகலா பெயரில் உள்ள ட்வீட் பதிவு ஸ்கிரீன் ஷாட் பகிரப்பட்டு வருகிறது. அதில், “அமித்ஷா என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையை ஏற்க தயார் என கேட்டார் நான் போன வைடா *** என்று சொல்லிவிட்டேன்” என்று உள்ளது. 

இந்த பதிவை நான் ஜோக்கர் என்ற ஃபேஸ்புக் பக்கம் மார்ச் 2, 2021 அன்று பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சசிகலாவுக்கு சமூக ஊடக பக்கங்களில் கணக்கு இல்லை. இருப்பினும் தொடர்ந்து அவருடைய பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் அக்கவுண்டுகளில் இருந்து பதிவு வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதை சசிகலாவே வெளியிட்டார் என்று நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த பதிவும் ஏராளமானவர்களால் பகிரப்பட்டு வருகிறது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

சசிகலா பெயரில் பல போலியான கணக்குகள் செயல்பட்டு வருகின்றனர். இதை யார் வெளியிட்டது என்று பார்த்தோம். இந்த கணக்கு பற்றி ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது. மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறேன் என்று சசிகலா கூறியதாக ட்வீட் பதிவு வெளியாகி இருந்தது. அந்த போலியான ட்விட் வெளியிட்ட அக்கவுண்ட் இதுதான் என்பது அதன் ஐடியை வைத்து ட்விட்டரில் தேடியபோது தெரிந்தது. மேலும், அந்த ஐ.டி-யில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ட்வீட் பதிவும் இருந்தது.

Archive

இந்த ட்விட்டர் பக்கத்தின் சுய விவர குறிப்பில், “#parody sister of A1,mafia,ex scammer,ஜெயில் பறவை” என்று குறிப்பிட்டிருந்தனர். இதே ட்விட்டர் கணக்கில் இருந்து தொடர்ந்து அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கு எதிராக பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதை அதிமுக, பா.ஜ.க எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து தங்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டு வருவதையும் காண முடிந்தது.

இதன் மூலம் யாரோ அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி எதிர்ப்பாளர் சசிகலா பெயரில் போலியாக ட்வீட்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதும், அதை பலரும் ஷேர் செய்து வருவதும் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவை சசிகலா வெளியிடவில்லை என்று சந்தேகமின்றி உறுதி செய்கிறோம்.

முடிவு:

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திட்டினேன் என்று சசிகலா வெளியிட்டதாக கூறப்படும் ட்வீட் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அமித்ஷாவை சசிகலா திட்டியதாகக் கூறி பரவும் போலி ட்வீட்!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •