
‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று கூறினார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், புதிய தலைமுறை பெயரில் ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’இந்துக்கள் ஓட்டு போட்டுதான் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அவசியம்யில்லை – திமுக தலைவர் ஸ்டாலின்,’’ என்று எழுத்துப் பிழைகளுடன் ஒரு தகவலை பதிவிட்டுள்ளனர்.
இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்ட சூழலில், பிரசாரப் பணிகளும் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று கூறியதாக, மேற்கண்ட தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையாக இருந்தால், தமிழ்நாட்டில் தற்போது பெரும் அரசியல் சர்ச்சை ஏற்படும்.
ஆனால், இது உண்மையில்லை. இந்துக்கள் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் கூட சமீபத்தில், திமுக ஒன்றும் இந்து விரோத கட்சி இல்லை என்று பதில் பேசியிருந்ததை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி இவ்வாறு புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா என்று தகவல் தேடினோம். அப்படி எங்கேயும் தகவல் காணப்படவில்லை. இதையடுத்து, குறிப்பிட்ட நியூஸ் கார்டு உண்மையா என்று புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகி மனோஜை தொடர்பு கொண்டு கேட்டோம். இந்த நியூஸ் கார்டை பார்வையிட்ட அவர், ‘’இது தவறான தகவல். நாங்கள் இப்படி எந்த செய்தியும் வெளியிடவில்லை,’’ என்றார்.
எனவே, ஸ்டாலின் பெயரில் பகிரப்படும் மேற்கண்ட நியூஸ் கார்டு போலியான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி…
Fact Check By: Pankaj IyerResult: False
