திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தினரா?
‘’ திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இந்த பதிவில் ‘’ அரே பில்லா...துலுக்கத்துக்கு வந்த சோதனை...இந்து மதத்தில் ஜாதிய கொடுமைகள் இருப்பதால் முஸலீமாக மதம் மாறினால் பாய் என்றும் பாயம்மானு கூப்பிடுவாங்கனு தெருமா சொன்னதை நம்பி மதம் மாறிய தலித்துகள் கீழ்ஜாதி மேல்ஜாதி என் அடித்துக்கொள்ளும் அற்புதமான தலித் முசுலீம் ஜாதி சண்டையை பாரீர்...,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, கூகுள் உதவியுடன் ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம்.
அப்போது, இந்த வீடியோ சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், Moradabad பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் எடுக்கப்பட்டது, என்று தெரியவந்தது.
இதன்படி, Moradabad - Pakbara police station, Umri Sabjipur village மசூதி ஒன்றில் தொழுகைக்காக வந்த இளைஞர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேரம் செல்ல செல்ல அது கோஷ்டி மோதலாக மாற, ஒருவரை ஒருவர் சராமரியாக தாக்கிக் கொண்டதாக, தெரிகிறது. இதில், சாதி பாகுபாடு வைத்துக் கொண்டு அவர்கள் மோதிக் கொண்டதாக, தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட போலீசாரிடமும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.
Aajtak link l Zee News l Dainik Bhaskar l Clarion India
இதன்படி, உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம்களுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக, தெரிகிறது. மேலும், இதற்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
எனவே, உத்தரப் பிரதேச வீடியோவை எடுத்து, தமிழ்நாட்டில் நிகழ்ந்தது போன்று வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு: உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
(இந்த ஃபேக்ட்செக் கட்டுரையின் தலைப்பு, உள்ளடக்கம் ஆகியவற்றில் 21.09.2024 அன்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் ஆதாரத்திற்காக, TV9 Bharatvarsh, India News வெளியிட்ட யூ டியுப் வீடியோக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.)