வெள்ள சேதத்தை பார்வையிட வந்த இடத்தில் சமோசா சாப்பிட்ட ராகுல்! – வைரல் வீடியோ உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

வெள்ள பாதிப்பை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற ராகுல் காந்தி, சமோசாவை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்ததாக ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு…

தகவலின் விவரம்:

வெள்ளம் பாதித்த பகுதிகளை மிகவும் சிரத்தையுடன் பார்வையிடும் வருங்கால இத்தாலிய பிரதமர்

என்னே ஒரு அக்கறை சமோசா மேல

Archived link

ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி அமர்ந்திருக்கிறார். அருகில் ஒரு கவரில் இருந்து சமோசாவை எடுத்து அருகில் உள்ளவர்கள், வீடியோ எடுப்பவர் என அனைவருக்கும் கொடுக்கிறார் ராகுல் காந்தி. பின்னர் தானும் சாப்பிடுகிறார். வெறும் 30 விநாடிகள் மட்டுமே இந்த வீடியோ ஓடுகிறது.  2019 ஏப்ரல் 26ம் தேதி இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. ஆனால், இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ‘பாசம்’ என்ற ஃபேஸ்புக் குழு, வெள்ள பாதிப்பைப் பார்வையிட சென்ற இத்தாலி பிரதமர் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டுள்ளது. தேர்தல் நேரம் என்பதால், ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி எதிர்ப்பாளர்கள் மற்றும் பா.ஜ.க-வினரால் இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்ட இடத்துக்குச் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவது வழக்கம். இந்த வீடியோ பதிவில் ஹெலிகாப்டர் தரையில்தான் இருக்கிறது. வெள்ள பகுதிகளைப் பார்வையிடுவது போன்ற காட்சி எதுவும் இல்லை.

RAHUL 2.png

வீடியோவின் முக்கிய ஃபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது போன்று ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் நோக்கத்தில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது தெரியவந்தது.

RAHUL 3.png
RAHUL 4.png

கூகுளில், சமோசா சாப்பிடும் ராகுல் காந்தி என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, இந்த வீடியோ குறித்த தகவல் கிடைத்தன.

RAHUL 5.png

அந்த லிங்கை ஓப்பன் செய்து படித்தோம். அதில், மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒரு செய்தி கிடைத்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

ஏப்ரல் 23ம் தேதி ராகுல் காந்தி மத்திய பிரதேசம் சென்றாரா என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்துக்கு சென்று, ராகுல் காந்தி பயண அட்டவணையை ஆய்வு செய்தோம். அதில், 23ம் தேதி ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் அவர் பிரசாரம் மேற்கொண்டது உறுதியானது.

Archived link

RAHUL 6.png

இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்துக்குச் சென்று 23ம் தேதி, ஹெலிகாப்டரில் பயணிப்பது போன்ற வீடியோ ஏதேனும் பதிவிடப்பட்டுள்ளதா என்று பார்த்தோம்.

RAHUL 7.png

அப்போது, ஏப்ரல் 23ம் தேதி ஹெலிகாப்டரில் பயணிப்பது போன்ற 7.48 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு வீடியோ இருந்தது.

Archived link

அதில், பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் வரை காரில் வருவதும், ஹெலிகாப்டரில் குளிர்பானம் உள்ளிட்ட சிற்றுண்டி வைக்கப்பட்டிருப்பதும் பதிவாகியுள்ளது. ஹெலிகாப்டர் புறப்படும் வரை மொபைல் போன் கேமிராவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற வீடியோ காட்சிகள் இதிலிருந்து எடுக்கப்பட்டதுதான் என உறுதியாகிறது. சரியாக 4.18 நிமிடத்தில் இருந்து அந்த காட்சியைக் காணலாம்.

RAHUL 8.png

தேர்தல் பிரசாரத்தில் சரியாக சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஹெலிகாப்டரிலேயே ராகுல் காந்தி சிற்றுண்டி சாப்பிடுவதைக் காட்டும் வகையில் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த வீடியோவை வைத்தே அவருக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த விவரம்:

1) ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி, மத்தியப் பிரதேசம் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.
2) ஏப்ரல் 23ம் தேதி மத்திய பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3) ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
4) ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில் இருந்து வீடியோவை எடுத்து எடிட் செய்து, “வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட வந்த ராகுல் காந்தி சமோசா சாப்பிட்டார்” என்று தவறான தகவலை சித்தரித்து, வெளியிட்டுள்ளது சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:வெள்ள சேதத்தை பார்வையிட வந்த இடத்தில் சமோசா சாப்பிட்ட ராகுல்! – வைரல் வீடியோ உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: False