‘குஜராத் வெள்ளம் – மண்ணில் புதைந்த வாகனங்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’குஜராத் வெள்ளம் – மண்ணில் புதைந்த வாகனங்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில் மோடி ‘’பாஜக ஆட்சியில் சாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது,’’ என்று பேசுகிறார். அதன் பின்னணியில் சாலை ஒன்றின் நடுவே, ஜேசிபி வாகனம், வேன் என வாகனங்கள் பலவும் புதையுண்டு நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதனை ‘குஜராத் மாடல்’ என்று பாஜக.,வினர் பெருமையாகக் குறிப்பிடுவது வழக்கம். இந்த நற்பெயரை பயன்படுத்தி, குஜராத் முதல்வராக இருந்த மோடி, தற்போது இந்திய பிரதமராக வளர்ச்சி பெற்றுள்ளார். எனவே, குஜராத்தில் மழை வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளதை எதிர்க்கட்சியினர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த சூழலில், மோடியின் குரல் பின்னணியில் ஒலிக்க, வாகனங்கள் நடுரோட்டில் புதையுண்டு நிற்பது போன்ற வீடியோவை பகிர்ந்து, பாஜக ஆட்சி லட்சணம் இதுதான் என்று குறிப்பிட்டு, பலரும் தகவல் பரப்புகின்றனர்.
ஆனால், இந்த வீடியோவுக்கும், குஜராத் மாநிலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
இது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏற்பட்ட கனமழை தொடர்பான காட்சி என்று நமக்கு விவரம் கிடைத்தது. இதுதொடர்பான வீடியோ மற்றும் செய்தி ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Janmanasshekhawati Link l Bhaskar Link
ராஜஸ்தான் மாநிலத்திலும் தற்போது பாஜக ஆட்சியே நடைபெறுகிறது. எனினும் இதற்கும், குஜராத் மாநிலத்திற்கும் தொடர்பில்லை. மேலும், இது இயற்கை பேரிடர் தொடர்பான ஒன்று. இதில் வேண்டுமென்றே அரசியலை திணித்து, உள்நோக்கத்துடன் வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram