‘’கேரளாவில் பால் ஹலால் செய்யப்படும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

இதில், ‘’ இந்த பாலை தான் கேரளா மக்கள் இவ்வளவு நாளும் குடிச்சிட்டு இருந்திருக்கிறார்கள் ஹலால் பால் மிகவிரைவில் தமிழகத்திலும்.. 🖕🖕🖕😭😭😭😭😭😭,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் இணக்கப்பட்டுள்ள வீடியோவிலும், ‘Muslim man takes bath in milk. He want to make it Halal. Kerala’ என்றும் எழுதியுள்ளனர்.

Claim Link l Archived Link

பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த வீடியோ காட்சிகளை வைத்து தகவல் தேடியபோது, கடந்த 2020ம் ஆண்டே இதுதொடர்பாக பல்வேறு ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்ததைக் கண்டோம்.

NDTV Link l India Times Link l Hurriyet Daily News Link

இதன்படி, கடந்த 2020ம் ஆண்டு, துருக்கி நாட்டில் உள்ள சென்ட்ரல் அனடோலியன் மாகாணத்தின் Konya என்ற நகரில் செயல்படும் பால் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இவ்வாறு குளிப்பது போன்று வீடியோ எடுத்து, டிக் டொக்கில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகப் பரவியதை தொடர்ந்து, அந்த தொழிற்சாலை மூடப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மேலும், விசாரணையில் அவர் பாலில் குளிக்கவில்லை என்பது உறுதியானதால், 2021ம் ஆண்டே வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டார். இதையடுத்து, தன் மீது குறிப்பிட்ட ஊழியர் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்து, வெற்றியும் பெற்றிருக்கிறார்.

Hurriyet Daily News Link

எனவே, 2020ம் ஆண்டு துருக்கி நாட்டில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றை எடுத்து, ‘கேரளாவில் பால் ஹலால் செய்யப்படும் காட்சி’ என வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:‘கேரளாவில் பால் ஹலால் செய்யப்படும் காட்சி’ என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False